பாடல் 164 - பழநி - திருப்புகழ்

ராகம் - ....; தாளம் -
தனனத் தனனத் தனனத் தனனத் தனனத் தனனத் ...... தனதான |
தகைமைத் தனியிற் பகைகற் றுறுகைத் தநுமுட் டவளைப் ...... பவனாலே தரளத் திரளிற் புரளக் கரளத் தமரத் திமிரக் ...... கடலாலே உகைமுத் தமிகுத் ததெனப் பகல்புக் கொளிமட் குமிகைப் ...... பொழுதாலே உரையற் றுணர்வற் றுயிரெய்த் தகொடிக் குனநற் பிணையற் ...... றரவேணும் திகைபத் துமுகக் கமலத் தனைமுற் சிறையிட் டபகைத் ...... திறல்வீரா திகழ்கற் பகமிட் டவனக் கனகத் திருவுக் குருகிக் ...... குழைமார்பா பகலக் கிரணப் பரணச் சடிலப் பரமற் கொருசொற் ...... பகர்வோனே பவனப் புவனச் செறிவுற் றுயர்மெய்ப் பழநிக் குமரப் ...... பெருமாளே. |
இப்பாட்டு அகத்துறையில் 'நாயக நாயகி' பாவத்தில் முருகனைப் பிரிந்த தலைவிக்காக அவளது தாய் பாடியது.மன்மதன், அவனது வில், கடல், இரவு, இவை தலைவியின் பிரிவுத்துயரைக் கூட்டுவன.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 164 - பழநி - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனனத், நிற்கும், அற்றும், விளங்கும், கொண்ட, உள்ள, குமரப், பெருமாளே, மீது