பாடல் 1324 - புதிய பாடல்கள் - திருப்புகழ்

ராகம் -
...; தாளம் -
தந்த தனந்த தனத்த தானன தந்த தனந்த தனத்த தானன தந்த தனந்த தனத்த தானன ...... தனதானா |
தங்க மிகுந்த முலைக்க டாமலை பொங்க விரும்பி யமுத்து மாலைகள் தங்க அணிந்து முறுக்கும் வேசியர் ...... மொழியாலே சஞ்ச லமிஞ்சி மயக்கி யேஒரு மஞ்ச மிருந்து சுகிக்க வேவளர் சந்து சுகந்த முடித்து நூலிடை ...... கிடையாடக் கொங்கை குலுங்க வளைத்து வாயத ரங்க ளருந்தி ருசிக்க வேமத குங்கு மமிஞ்சு கழுத்தி லேகுயி ...... லெனஓசை கொண்ட வரிந்த விதத்தி னாடர சங்கி லிகொண்டு பிணித்து மாமயில் கொஞ்சி மகிழ்ந்த வறட்டு வீணியர் ...... உறவாமோ திங்கள் அரும்பு சலத்தி லேவிடம் வந்த துகண்டு பயப்ப டாதவர் சிந்தை நடுங்கி இருக்க வேமயில் ...... மிசையேறிச் சிங்க முகன்த லைவெட்டி மாமுகன் அங்க மறுந்து கிடக்க வேவரு சிம்பு ளெனும்ப டிவிட்ட வேலுள ...... குருநாதா மங்கை மடந்தை கதிக்கு நாயகி சங்க ரிசுந்த ரிஅத்தி யானனை மைந்த னெனும்ப டிபெற்ற ஈசுரி ...... தருபாலா மந்தி ரதந்தி ரமுத்த யோகியர் அஞ்ச லிசெங்கை முடிக்க வேஅருள் வந்து தரும்ப டிநித்த மாடிய ...... பெருமாளே. |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 1324 - புதிய பாடல்கள் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தானன, தந்த, தனத்த, தனந்த, பெருமாளே, விலை, நாயகி, மகளிர், யோகியர், உடைய, மீது, அருளிய, கண்டு, கதிக்கு, மயில், தங்கள், நடுங்கி, குலுங்க, மாலைகள், மிகுந்த, தங்க, வளைத்து, ருசிக்க, மங்கை, வறட்டு, கொஞ்சி, பிணித்து, மடந்தை