பாடல் 1319 - பழமுதிர்சோலை - திருப்புகழ்

ராகம் - ...;
தாளம் -
தானதன தத்த தானதன தத்த தானதன தத்த ...... தனதான |
வார்குழையை யெட்டி வேளினைம ருட்டி மாயநம னுக்கு ...... முறவாகி மாதவம ழித்து லீலைகள் மிகுத்து மாவடுவை யொத்த ...... விழிமாதர் சீருட னழைத்து வாய்கனிவு வைத்து தேனித ழளித்து ...... அநுபோக சேர்வைதனை யுற்று மோசம்விளை வித்து சீர்மைகெட வைப்ப ...... ருறவாமோ வாரினை யறுத்து மேருவை மறித்து மாகனக மொத்த ...... குடமாகி வாரவணை வைத்து மாலளித முற்று மாலைகளு மொய்த்த ...... தனமாது தோரணி புயத்தி யோகினி சமர்த்தி தோகையுமை பெற்ற ...... புதல்வோனே சூர்கிளை மடித்து வேல்கர மெடுத்து சோலைமலை யுற்ற ...... பெருமாளே. |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 1319 - பழமுதிர்சோலை - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - வைத்து, தத்த, தானதன, அழித்து, போல், உறவு, யோகினி, லீலைகள், பெற்ற, பெருமாளே