பாடல் 1318 - பழமுதிர்சோலை - திருப்புகழ்

ராகம் -
சக்ரவாஹம் / குந்தலவராளி
தாளம் - ஆதி
- எடுப்பு - 1/2 இடம்
தாளம் - ஆதி
- எடுப்பு - 1/2 இடம்
தானதன தந்த தானதன தந்த தானதன தந்த ...... தனதான |
வாதினை யடர்ந்த வேல்விழியர் தங்கள் மாயமதொ ழிந்து ...... தெளியேனே மாமலர்கள் கொண்டு மாலைகள் புனைந்து மாபதம ணிந்து ...... பணியேனே ஆதியொடு மந்த மாகிய நலங்கள் ஆறுமுக மென்று ...... தெரியேனே ஆனதனி மந்த்ர ரூபநிலை கொண்ட தாடுமயி லென்ப ...... தறியேனே நாதமொடு விந்து வானவுடல் கொண்டு நானிலம லைந்து ...... திரிவேனே நாகமணி கின்ற நாதநிலை கண்டு நாடியதில் நின்று ...... தொழுகேனே சோதியுணர் கின்ற வாழ்வுசிவ மென்ற சோகமது தந்து ...... எனையாள்வாய் சூரர்குலம் வென்று வாகையொடு சென்று சோலைமலை நின்ற ...... பெருமாளே. |
வம்பு செய்வது போன்று அடர்ந்து நெருங்கி வேலொத்த கண்களை உடைய பெண்களின் மயக்குதல் என்னை நீங்கி நான் தெளிவு பெறவில்லையே. நல்ல மலர்களால் ஆன மாலைகளைத் தொடுத்து நின் சீரிய அடிகளில் சூட்டி நான் பணியவில்லையே. முதலில் தொடங்கி இறுதி வரை உள்ள சகல நலன்களும் ஆறுமுகம்* என்ற உண்மையை நான் தெரிந்து கொள்ளவில்லையே. ஒப்பற்ற ஓங்கார மந்திர ரூபநிலை கொண்டது ஆடுகின்ற நிலையிலுள்ள மயில்தான் என்று அறியவில்லையே. நாதமும் விந்துவும் சேர்ந்து உருவாக்கிய இவ்வுடலால் உலகமெல்லாம் அலைந்து திரிகின்றேனே. குண்டலினியாக ஓடும் பிராணவாயு அடைகின்ற ஆறாவது நிலையை (ஆக்ஞாசக்ரமாகிய ஒளி வீசும் ஞான சதாசிவ நிலையைக்) கண்டு தரிசித்து** விருப்புற்று அந்த நிலையிலே நின்று நான் தொழவில்லையே. அந்த ஞான ஒளியை உணர்கின்ற வாழ்வே சிவ வாழ்வு என்ற (ஸா + அகம்) அதுவே நான் என்ற நிலை தந்து, என்னை ஆள்வாய். சூரர் குலத்தை வென்று வெற்றியோடு போய் பழமுதிர்ச்சோலை மலையில் வீற்றிருக்கும் பெருமாளே.
* ஆறுமுகம் என்ற தத்துவம்:1. அ, உ, ம், நாதம், விந்து, சக்தி.2. சிவனது ஐந்து முகங்களும் தேவியின் ஒரு முகமும்.3. ஆதி, இச்சா, கிரியா, பரா, ஞான, குடிலா சக்திகள் என்ற ஆறு சக்திகள்.4. ஐசுவரியம், வீரியம், புகழ், திரு, ஞானம், வைராக்கியம் என்ற ஆறு குணங்கள்.
** ஆதாரங்களின் பெயர்களும், உடலில் இருக்கும் இடம், உரிய ஐம்பூதங்கள், அனுட்டிக்கும்போது மலர் வடிவங்களின் அமைப்பு, அக்ஷரக் குறிப்பு ஆகியவை கீழே தரப்பட்டுள்ளன. மேலும் இந்த ஆதாரங்களுக்கு உரிய தலங்கள், கடவுளர்கள் பெயர்களும் கொடுக்கப்பட்டுள்ளன.ஆதாரம்இடம்பூதம்வடிவம்அக்ஷரம்தலம்கடவுள்மூலாதாரம்குதம்மண்4 இதழ் கமலம்முக்கோணம்ஓம்திருவாரூர்விநாயகர்சுவாதிஷ்டானம்கொப்பூழ்அக்கினி6 இதழ் கமலம்லிங்கபீடம்நாற் சதுரம்ந (கரம்)திருவானைக்காபிரமன்மணிபூரகம்மேல்வயிறுநீர்10 இதழ் கமலம்பெட்டிப்பாம்புநடு வட்டம்ம (கரம்)திரு(வ)அண்ணாமலைதிருமால்அநாகதம்இருதயம்காற்று12 இதழ் கமலம்முக்கோணம்கமல வட்டம்சி (கரம்)சிதம்பரம்ருத்திரன்விசுத்திகண்டம்ஆகாயம்16 இதழ் கமலம்ஆறு கோணம்நடு வட்டம்வ (கரம்)திருக்காளத்திமகேசுரன்ஆக்ஞாபுருவத்தின் நடுமனம்3 இதழ் கமலம்ய (கரம்)காசி(வாரணாசி)சதாசிவன்பிந்து சக்கரம்(துவாதசாந்தம்,ஸஹஸ்ராரம்,பிரமரந்திரம்)கபாலத்தின்மேலே 1008இதழ் கமலம் திருக்கயிலைசிவ . சக்திஐக்கியம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 1318 - பழமுதிர்சோலை - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - இதழ், நான், கரம், தானதன, தந்த, அந்த, சக்திகள், உரிய, என்னை, பெயர்களும், திரு, வென்று, விந்து, ரூபநிலை, கொண்டு, கின்ற, கண்டு, இடம், தந்து, நின்று, பெருமாளே