பாடல் 1317 - பழமுதிர்சோலை - திருப்புகழ்

ராகம் - ...;
தாளம் -
தானத் தானன தத்தன தத்தன தானத் தானன தத்தன தத்தன தானத் தானன தத்தன தத்தன ...... தனதான |
பாசத் தால்விலை கட்டிய பொட்டிகள் நேசித் தாரவர் சித்தம ருட்டிகள் பாரப் பூதர மொத்தத னத்திகள் ...... மிகவேதான் பாவத் தால்மெயெ டுத்திடு பட்டிகள் சீவிக் கோதிமு டித்தள கத்திகள் பார்வைக் கேமய லைத்தரு துட்டிக ...... ளொழியாத மாசுற் றேறிய பித்தளை யிற்பணி நீறிட் டேயொளி பற்றவி ளக்கிகள் மார்பிற் காதினி லிட்டபி லுக்கிகள் ...... அதிமோக வாய்வித் தாரமு ரைக்கும பத்திகள் நேசித் தாரையு மெத்திவ டிப்பவர் மாயைக் கேமனம் வைத்தத னுட்டின ...... மலைவேனோ தேசிக் கானக முற்றதி னைப்புன மேவிக் காவல்க வட்கல்சு ழற்றுவள் சீதப் பாதகு றப்பெண்ம கிழ்ச்சிகொள் ...... மணவாளா தேடிப் பாடிய சொற்புல வர்க்கித மாகத் தூதுசெ லத்தரில் கற்பக தேவர்க் காதிதி ருப்புக லிப்பதி ...... வருவோனே ஆசித் தார்மன திற்புகு முத்தம கூடற் கேவைகை யிற்கரை கட்டிட ஆளொப் பாயுதிர் பிட்டமு துக்கடி ...... படுவோனோ டாரத் தோடகி லுற்றத ருக்குல மேகத் தோடொரு மித்துநெ ருக்கிய ஆதிச் சோலைம லைப்பதி யிற்றிகழ் ...... பெருமாளே. |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 1317 - பழமுதிர்சோலை - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தத்தன, தானன, தானத், தோறும், அந்த, மரமும், ஆபரணங்களை, சென்று, பெருமாளே, நேசித், பித்தளை, பாடிய, உடையவர்கள், மிகவும்