பாடல் 1314 - பழமுதிர்சோலை - திருப்புகழ்

ராகம் - தேநுக
தாளம் - திஸ்ரத்ரிபுடை
தாளம் - திஸ்ரத்ரிபுடை
தனனாதன தானன தத்தன தனனாதன தானன தத்தன தனனாதன தானன தத்தன ...... தனதான |
கருவாகியெ தாயுத ரத்தினி லுருவாகவெ கால்கையு றுப்பொடு கனிவாய்விழி நாசியு டற்செவி ...... நரைமாதர் கையிலேவிழ வேகிய ணைத்துயி லெனவேமிக மீதுது யிற்றிய கருதாய்முலை யாரமு தத்தினி ...... லினிதாகித் தருதாரமு மாகிய சுற்றமு நலவாழ்வுநி லாதபொ ருட்பதி சதமாமிது தானென வுற்றுனை ...... நினையாத சதுராயுன தாளிணை யைத்தொழ அறியாதநிர் மூடனை நிற்புகழ் தனையோதிமெய்ஞ் ஞானமு றச்செய்வ ...... தொருநாளே செருவாயெதி ராமசு ரத்திரள் தலைமூளைக ளோடுநி ணத்தசை திமிர்தாதுள பூதக ணத்தொடு ...... வருபேய்கள் திகுதாவுண வாயுதி ரத்தினை பலவாய்நரி யோடுகு டித்திட சிலகூகைகள் தாமுந டித்திட ...... அடுதீரா அருமாமறை யோர்கள்து தித்திடு புகர்வாரண மாதுத னைத்திகழ் அளிசேர்குழல் மேவுகு றத்தியை ...... அணைவோனே அழகானபொன் மேடையு யர்த்திடு முகில்தாவிய சோலைவி யப்புறு அலையாமலை மேவிய பத்தர்கள் ...... பெருமாளே. |
* பழமுதிர்ச்சோலை மதுரைக்கு வடக்கே 12 மைலில் உள்ள கள்ளழகர் கோயில் என்ற தலமாகும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 1314 - பழமுதிர்சோலை - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனனாதன, தத்தன, தானன, போற்றுகின்ற, அழகிய, உள்ள, பெருமாளே, டித்திட, தாயின், நிலைத்து