பாடல் 1313 - பழமுதிர்சோலை - திருப்புகழ்

ராகம் -
பீம்பளாஸ்
தாளம் - அங்கதாளம் - 9
தகிட-1 1/2, தகிட-1 1/2, தக-1
தகிட-1 1/2, தக-1, தகிட-1 1/2, தக-1
தாளம் - அங்கதாளம் - 9
தகிட-1 1/2, தகிட-1 1/2, தக-1
தகிட-1 1/2, தக-1, தகிட-1 1/2, தக-1
தான தானதன தத்ததன தத்ததன தான தானதன தத்ததன தத்ததன தான தானதன தத்ததன தத்ததன ...... தந்ததான |
ஆசை நாலுசது ரக்கமல முற்றினொளி வீசி யோடியிரு பக்கமொடு றச்செல்வளி ஆவல் கூரமண்மு தற்சலச பொற்சபையு ...... மிந்துவாகை ஆர மூணுபதி யிற்கொளநி றுத்திவெளி யாரு சோதிநுறு பத்தினுட னெட்டுஇத ழாகி யேழுமள விட்டருண விற்பதியின் ...... விந்துநாத ஓசை சாலுமொரு சத்தமதி கப்படிக மோடு கூடியொரு மித்தமுத சித்தியொடு மோது வேதசர சத்தியடி யுற்றதிரு ...... நந்தியூடே ஊமை யேனையொளிர் வித்துனது முத்திபெற மூல வாசல்வெளி விட்டுனது ரத்திலொளிர் யோக பேதவகை யெட்டுமிதி லொட்டும்வகை ...... யின்றுதாராய் வாசி வாணிகனெ னக்குதிரை விற்றுமகிழ் வாத வூரனடி மைக்கொளுக்ரு பைக்கடவுள் மாழை ரூபன்முக மத்திகைவி தத்தருண ...... செங்கையாளி வாகு பாதியுறை சத்திகவு ரிக்குதலை வாயின் மாதுதுகிர் பச்சைவடி விச்சிவையென் மாசு சேரழுபி றப்பையும றுத்தவுமை ...... தந்தவாழ்வே காசி ராமெசுரம் ரத்நகிரி சர்ப்பகிரி ஆரூர் வேலுர் தெவுர் கச்சிமது ரைப்பறியல் காவை மூதுரரு ணக்கிரிதி ருத்தணியல் ...... செந்தில்நாகை காழி வேளுர்பழ நிக்கிரி குறுக்கைதிரு நாவ லூர்திருவெ ணெய்ப்பதியின் மிக்கதிகழ் காதல் சோலைவளர் வெற்பிலுறை முத்தர்புகழ் ...... தம்பிரானே. |
திக்குகள் நான்கு பக்கங்களாகக் கொண்ட சதுரமான மூலாதாரக் கமலத்தில் பொருந்தி இனிய ஒளி வீசிட, இரண்டு பக்கங்களிலும் பொருந்தி (இடை கலை, பிங்கலை என்னும் இரு நாடிகளின் வழியாக) ஓடுகின்ற பிராண வாயு* விருப்பம் மிக்கெழ சுவாதிஷ்டான** (கொப்பூழ்) முதல் ஆக்கினை (புருவநடு) ஈறாக உள்ள ஐவகைக் கமலங்களிலும் ஓட வைத்து, (தில்லையில் நடனம் செய்யும் நடராஜரின்) கனக சபையும் சந்திர காந்தியால் நிரம்பி விளங்க, மூன்று (அக்கினி, ஆதித்த, சந்திர) மண்டங்களிலும் பொருந்த நிறுத்தி, வெளிப்படும் சோதியான ஆயிரத்து எட்டு இதழோடு கூடிய, (பிரமரந்திரம் - பிந்து மண்டலம், ஸஹஸ்ராரம் - அதனுடன் கூடிய ஆறு ஆதாரங்களுடன் மொத்தம்) ஏழு இடங்களையும் கண்டறிந்து, சிவந்த ஒளியுடன் கூடிய பன்னிரண்டாம் (துவாதசாந்த) ஆதாரத்தில், சிவசக்தி ஐக்கிய நாத ஓசை நிறைந்துள்ள ஒப்பற்ற சத்தம் மிகுந்த பளிங்கு போன்ற காட்சியுடன் கூடியதாய், ஒன்று சேர்ந்து மதி மண்டலத்தினின்றும் பெருகிப் பாயும் கலா அமிர்தப் பேற்றுடன், புகழ்ந்து சொல்லப்படும் வேத வாசி சக்திக்கு ஆதாரமாக உள்ள திரு நந்தி ஒளிக்குள்ளே, ஊமையாகிய என்னை விளங்க வைத்து நீ அருளும் முத்தியைப் பெற, பிரமரந்திரம் எனப்படும் மூலவாசல் வெளியிட்டு விளங்க, உனது அருளாற்றலால் ஒளிர்கின்ற யோக விதங்கள்*** எட்டும் இதில் பொருந்தும் வகையை நான் அறியுமாறு இன்று தந்தருளுக. குதிரை வியாபாரி என வந்து குதிரைகளை விற்று மகிழ்ச்சிகொண்ட திருவாதவூரராகிய மாணிக்க வாசகரை அடிமையாகக் கொண்ட கிருபாகர மூர்த்தி, பொன் உருவத்தினன், குதிரைச் சேணம், சவுக்கு வகைகளைப் பிடித்த செவ்விய திருக்கையைக் கொண்டவனாகிய சிவபெருமானுடைய இடது பக்கத்தில் உறைகின்ற சக்தி, கெளரி, மழலைச் சொல் பேசும் மாது, பவளமும் பச்சை நிறமும் கொண்ட வடிவினள், என்னுடைய குற்றம் நிறைந்த ஏழு பிறப்புகளையும் அறுத்த உமா தேவியார் ஈன்ற செல்வமே, காசி, இராமேசுரம், திருவாட்போக்கி, திருச்செங்கோடு, திருவாரூர், வேலூர், தேவூர், காஞ்சீபுரம், மதுரை, திருப்பறியல், திருவானைக்கா, திருப்புனைவாசல், திருவண்ணாமலை, திருத்தணிகை, திருச்செந்தூர், நாகப்பட்டினம், சீர்காழி, வைத்தீஸ்வரன் கோவில் (வேளூர்), பழநிமலை, திருக்குறுக்கை, திருநாவலூர், திருவெண்ணெய் நல்லூர் முதலிய தலங்களில் விளங்கும், (மேலும்) உனக்கு விருப்பமான சோலை மலையிலும் உறைகின்ற ஜீவன் முக்தர்கள் புகழ்கின்ற தம்பிரானே.
* இங்கு சிவயோக முறைகள் விளக்கப்பட்டுள்ளன. அதன் சுருக்கம் வருமாறு:நாம் உள்ளுக்கு இழுக்கும் காற்றுக்குப் 'பூரகம்' என்றும், வெளிவிடும் காற்றுக்கு 'ரேசகம்' என்றும் பெயர். உள்ளே நிறுத்திவைக்கப்படும் காற்றுக்கு 'கும்பகம்' என்று பெயர். உட் கொள்ளும் பிராணவாயு உடலில் குறிப்பிட்ட 'ஆதாரங்கள்' (நிலைகள், சக்கரங்கள்) மூலமாகப் படிப்படியாகப் பரவி, மேல் நோக்கிச் சென்று, தலையில் 'பிரம கபால'த்தில் உள்ள 'ஸஹஸ்ராரம்' (பிந்து சக்கரம்) என்ற சக்கரத்துக்குச் செல்லும். இந்த ஐக்கியம் ஏற்படும்போது, அமுத சக்தி பிறந்து, ஆறு ஆதாரங்களுக்கும் ஊட்டப்பட்டு, மீண்டும் அதே வழியில் 'மூலாதார'த்தை வந்து அடையும். இந்த ஆதாரங்களை ஒழுங்கு படுத்தும் வகையில் மூன்று 'மண்டல'ங்களும் (அக்கினி, ஆதித்த, சந்திர மண்டலங்கள்), பத்து 'நாடி'களும் (இடைகலை, பிங்கலை, சுழுமுனை முதலியன) உள்ளன.'இடைகலை' பத்து நாடிகளுள் ஒன்று. இடது நாசியால் விடும் சுவாசம்.'பிங்கலை' பத்து நாடிகளுள் ஒன்று. வலது நாசி வழியால் விடும் சுவாசம்.'சுழு முனை' இடைகலைக்கும் பிங்கலைக்கும் இடையில் உள்ளது.'சுழு முனை' ஆதாரம் ஆறிலும் ஊடுருவி நிற்பது. 'இடைகலை'யும், 'பிங்கலை'யும் ஒன்றுக்கொன்று பின்னி நிற்பன.சுவாச நடப்பை 'ப்ராணாயாமம்' என்ற யோக வன்மையால் கட்டுப்படுத்தினால் மன அமைதி ஏற்படும்.
** ஆதாரங்களின் பெயர்களும், உடலில் இருக்கும் இடம், உரிய ஐம்பூதங்கள், அனுட்டிக்கும்போது மலர் வடிவங்களின் அமைப்பு, அக்ஷரக் குறிப்பு ஆகியவை கீழே தரப்பட்டுள்ளன. மேலும் இந்த ஆதாரங்களுக்கு உரிய தலங்கள், கடவுளர்கள் பெயர்களும் கொடுக்கப்பட்டுள்ளன.ஆதாரம்இடம்பூதம்வடிவம்அக்ஷரம்தலம்கடவுள்மூலாதாரம்குதம்மண்4 இதழ் கமலம்முக்கோணம்ஓம்திருவாரூர்விநாயகர்சுவாதிஷ்டானம்கொப்பூழ்அக்கினி6 இதழ் கமலம்லிங்கபீடம்நாற் சதுரம்ந (கரம்)திருவானைக்காபிரமன்மணிபூரகம்மேல்வயிறுநீர்10 இதழ் கமலம்பெட்டிப்பாம்புநடு வட்டம்ம (கரம்)திரு(வ)அண்ணாமலைதிருமால்அநாகதம்இருதயம்காற்று12 இதழ் கமலம்முக்கோணம்கமல வட்டம்சி (கரம்)சிதம்பரம்ருத்திரன்விசுத்திகண்டம்ஆகாயம்16 இதழ் கமலம்ஆறு கோணம்நடு வட்டம்வ (கரம்)திருக்காளத்திமகேசுரன்ஆக்ஞாபுருவத்தின் நடுமனம்3 இதழ் கமலம்ய (கரம்)காசி(வாரணாசி)சதாசிவன்பிந்து சக்கரம்(துவாதசாந்தம்,ஸஹஸ்ராரம்,பிரமரந்திரம்)கபாலத்தின்மேலே 1008இதழ் கமலம் திருக்கயிலைசிவ . சக்திஐக்கியம்
(*3) அஷ்டாங்க யோகம் என்ற எட்டு வகை யோகங்கள் பின்வருமாறு:1. இயமம் - பொய்யாமை, கொல்லாமை, திருடாமை, காமுறாமை, பிறர் பொருள் வெ·காமையுடன் புலன் அடக்குதல்.2. நியமம் - தவம், தூய்மைத் தத்துவம் உணர்தல், புனிதம், தானம், சைவ முறைகள், சைவ சித்தாந்த ஞானம், யாகம்.3. ஆசனம் - உடலால் செய்யும் யோக முறைகள் - குறிப்பாக பத்ம, சிம்ம, பத்ர, கோமுக ஆசனங்கள்.4. ப்ராணாயாமம் - ரேசகம், கும்பகம், பூரகம் என்ற வகைகளிலே மூச்சை அடக்கி ஆளும் முறை.5. ப்ரத்யாஹாரம் - இந்திரியங்களை விஷயங்களிலிருந்து திருப்பி, இறைவனை உள்முகமாகப் பார்த்தல்.6. தாரணை - மனத்தை ஒருநிலைப் படுத்தி முதுகு நாடியிலுள்ள ஆறு சக்ர ஆதாரங்களிலும் இறைவனை பாவித்தல்.7. தியானம் - ஐம்புலன்கள், பஞ்ச பூதங்கள், மனம், சித்தம் முதலிய அந்தக்கரணங்கள் - இவற்றை அடக்கி தியானித்தல்.8. சமாதி - மனத்தைப் பரம்பொருளோடு நிறுத்தி ஸஹஸ்ராரத்தில் சிவ சக்தி ஐக்கியத்தோடு ஒன்றுபடல்.(ஆதாரம் 'திருமந்திரம்', திருமூலர் அருளியது).
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 1313 - பழமுதிர்சோலை - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தத்ததன, இதழ், கரம், பிங்கலை, தகிட, விளங்க, முறைகள், இடைகலை, கூடிய, சக்தி, சந்திர, பத்து, உள்ள, ஒன்று, தானதன, காசி, ஸஹஸ்ராரம், பிரமரந்திரம், கொண்ட, நாடிகளுள், சக்கரம், கும்பகம், உடலில், விடும், ஆதாரம், பெயர்களும், உரிய, அடக்கி, இறைவனை, ப்ராணாயாமம், யும், சுழு, முனை, பெயர், சுவாசம், உறைகின்ற, மூன்று, அக்கினி, ஆதித்த, நிறுத்தி, செய்யும், வைத்து, வாசி, தம்பிரானே, பொருந்தி, எட்டு, பிந்து, பூரகம், என்றும், காற்றுக்கு, மேலும், முதலிய, திரு, வந்து, இடது, ரேசகம்