பாடல் 1315 - பழமுதிர்சோலை - திருப்புகழ்

ராகம் - ...;
தாளம் -
தானதத்த தான தனாதனா தன தானதத்த தான தனாதனா தன தானதத்த தான தனாதனா தன ...... தனதானா |
சீர்சிறக்கு மேனி பசேல் பசே லென நூபுரத்தி னோசை கலீர் கலீ ரென சேரவிட்ட தாள்கள் சிவேல் சிவே லென ...... வருமானார் சேகரத்தின் வாலை சிலோர் சிலோர் களு நூறுலக்ஷ கோடி மயால் மயால் கொடு தேடியொக்க வாடி யையோ வையோ வென ...... மடமாதர் மார்படைத்த கோடு பளீர் பளீ ரென ஏமலித்தெ னாவி பகீர் பகீ ரென மாமசக்கி லாசை யுளோ முளோ மென ...... நினைவோடி வாடைபற்று வேளை யடா வடா வென நீமயக்க மேது சொலாய் சொலா யென வாரம்வைத்த பாத மிதோ இதோ என ...... அருள்வாயே பாரதத்தை மேரு வெளீ வெளீ திகழ் கோடொடித்த நாளில் வரைஇ வரைஇ பவர் பானிறக்க ணேசர் குவா குவா கனர் ...... இளையோனே பாடல்முக்ய மாது தமீழ் தமீ ழிறை மாமுநிக்கு காதி லுணார் வுணார் விடு பாசமற்ற வேத குரூ குரூ பர ...... குமரேசா போர்மிகுத்த சூரன் விடோம் விடோ மென நேரெதிர்க்க வேலை படீர் படீ ரென போயறுத்த போது குபீர் குபீ ரென ...... வெகுசோரி பூமியுக்க வீசு குகா குகா திகழ் சோலைவெற்பின் மேவு தெய்வா தெய்வா னைதொள் பூணியிச்சை யாறு புயா புயா றுள ...... பெருமாளே. |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 1315 - பழமுதிர்சோலை - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - பளீர், பகீர், தானதத்த, குபீர், படீர், தனாதனா, கலீர், பெருமாளே, புயா, தெய்வா, குகா, உண்டு, நன்கு, குகனே, கொண்ட, மலையில், அந்த, அன்பு, சொல்லுக, குரூ, பாரதத்தை, மேரு, மயால், கோடி, சிலோர், வெளீ, திகழ், சூரன், குவா, வரைஇ, நாளில், போது