பாடல் 1312 - பழமுதிர்சோலை - திருப்புகழ்

ராகம் - ...;
தாளம் -
தானதன தந்த தந்த தானதன தந்த தந்த தானதன தந்த தந்த ...... தனதான |
வாரண முகங்கி ழிந்து வீழவு மரும்ப லர்ந்து மால்வரை யசைந்த நங்கன் ...... முடிசாய வாளகிரி யண்ட ரண்ட கோளமுற நின்றெ ழுந்த மாதவ மறந்து றந்து ...... நிலைபேரப் பூரண குடங்க டிந்து சிதகள பம்பு னைந்து பூசலை விரும்பு கொங்கை ...... மடவார்தம் போக சயனந் தவிர்ந்து னாடக பதம்ப ணிந்து பூசனைசெய் தொண்ட னென்ப ...... தொருநாளே ஆரண முழங்கு கின்ற ஆயிர மடந்த வங்கள் ஆகுதி யிடங்கள் பொங்கு ...... நிறைவீதி ஆயிர முகங்கள் கொண்ட நூபுர மிரங்கு கங்கை யாரமர வந்த லம்பு ...... துறைசேரத் தோரண மலங்கு துங்க கோபுர நெருங்கு கின்ற சூழ்மணிபொன் மண்ட பங்கள் ...... ரவிபோலச் சோதியின் மிகுந்த செம்பொன் மாளிகை விளங்குகின்ற சோலைமலை வந்து கந்த ...... பெருமாளே. |
* நூபுரம் இரங்கு கங்கை - சிலம்பாறு பாயும் தென்திருமாலிருஞ் சோலையைக் குறிக்கும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 1312 - பழமுதிர்சோலை - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தந்த, ஒப்பிடலாம், என்றால், தானதன, வந்து, விழுந்தது, நூபுரம், சிலம்பாறு, ஒலிக்கும், பெரிய, பெருமாளே, ஆயிர, கின்ற, கங்கை, மிகுந்த, விளங்குகின்ற, மார்பகங்களை