பாடல் 1309 - பழமுதிர்சோலை - திருப்புகழ்

ராகம் -
ஹம்ஸத்வனி
தாளம் - அங்கதாளம் - 8 1/2
தகதகிட-2 1/2, தகிட-1 1/2, தகிட-1 1/2, தகதிமிதக-3
தாளம் - அங்கதாளம் - 8 1/2
தகதகிட-2 1/2, தகிட-1 1/2, தகிட-1 1/2, தகதிமிதக-3
தானதன தான தந்த ...... தனதான |
காரணம தாக வந்து ...... புவிமீதே காலனணு காதி சைந்து ...... கதிகாண நாரணனும் வேதன் முன்பு ...... தெரியாத ஞானநட மேபு ரிந்து ...... வருவாயே ஆரமுத மான தந்தி ...... மணவாளா ஆறுமுக மாறி ரண்டு ...... விழியோனே சூரர்கிளை மாள வென்ற ...... கதிர்வேலா சோலைமலை மேவி நின்ற ...... பெருமாளே. |
ஊழ்வினையின் காரணமாக வந்து இந்த பூமியில் பிறந்து, காலன் என்னை நெருங்காதபடிக்கு நீ மனம் பொருந்தி நான் நற்கதியை அடைய, திருமாலும் பிரம்மாவும் முன்பு கண்டறியாத ஞான நடனத்தை ஆடி வருவாயாக. நிறைந்த அமுது போல் இனிய தேவயானையின் மணவாளனே, ஆறு திருமுகங்களையும், பன்னிரண்டு கண்களையும் உடையவனே, சூரர் கூட்டங்கள் இறக்கும்படியாக வெற்றி கொண்ட ஒளிமிக்க வேலனே, பழமுதிர்ச்சோலை மலையில் மேவி விளங்கும் பெருமாளே.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 1309 - பழமுதிர்சோலை - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - பெருமாளே, மேவி, முன்பு, வந்து, தகிட