பாடல் 1308 - பழமுதிர்சோலை - திருப்புகழ்

ராகம் - ...;
தாளம் -
தனதன தான தான தனதன தான தான தனதன தான தான ...... தனதான |
இலவிதழ் கோதி நேதி மதகலை யார வார இளநகை யாட ஆடி ...... மிகவாதுற் றெதிர்பொரு கோர பார ம்ருகமத கோல கால இணைமுலை மார்பி லேற ...... மதராஜன் கலவியி லோடி நீடு வெகுவித தாக போக கரணப்ர தாப லீலை ...... மடமாதர் கலவியின் மூழ்கி யாழு மிழிதொழி லேனு மீது கருதிய ஞான போத ...... மடைவேனோ கொலைபுரி காளி சூலி வயிரவி நீலி மோடி குலிசகு டாரி யாயி ...... மகமாயி குமரிவ ராகி மோகி பகவதி யாதி சோதி குணவதி யால வூணி ...... யபிராமி பலிகொள்க பாலி யோகி பரமகல் யாணி லோக பதிவ்ரதை வேத ஞானி ...... புதல்வோனே படையொடு சூரன் மாள முடுகிய சூர தீர பழமுதிர் சோலை மேவு ...... பெருமாளே. |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 1308 - பழமுதிர்சோலை - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனதன, சூரன், பழமுதிர், பெருமாளே, ஞானி, பகவதி, காளி, மகமாயி, மோகி, குணவதி