பாடல் 1300 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ்

ராகம் -
ஆபோகி
தாளம் - அங்கதாளம் - 9
தகிடதக-2 1/2, தகதமி-2, தகிட-1 1/2, தகதிமிதக-3
தாளம் - அங்கதாளம் - 9
தகிடதக-2 1/2, தகதமி-2, தகிட-1 1/2, தகதிமிதக-3
தத்தனத் தாத்தத் தாத்த ...... தனதான |
புத்தகத் தேட்டிற் றீட்டி ...... முடியாது பொற்புறக் கூட்டிக் காட்டி ...... யருள்ஞான வித்தகப் பேற்றைத் தேற்றி ...... யருளாலே மெத்தெனக் கூட்டிக் காக்க ...... நினைவாயே தத்தைபுக் கோட்டிக் காட்டி ...... லுறைவாளைச் சற்கரித் தேத்திக் கீர்த்தி ...... பெறுவோனே கைத்தலத் தீக்குப் பார்த்து ...... நுழையாத கற்பகத் தோப்புக் காத்த ...... பெருமாளே. |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 1300 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - பெருமாளே, காத்த, கற்பகத், காட்டி, கூட்டிக்