பாடல் 1299 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ்

ராகம் - கல்யாணி
தாளம் - அங்கதாளம் - 8 கண்டஜம்பை - 15யு 0
தகிட-1 1/2, தக-1, தகிட-1 1/2, தக-1, தகதிமிதக-3
தனதனன தாத்தனத் ...... தனதான |
பிறவியலை யாற்றினிற் ...... புகுதாதே பிரகிருதி மார்க்கமுற் ...... றலையாதே உறுதிகுரு வாக்கியப் ...... பொருளாலே உனதுபத காட்சியைத் ...... தருவாயே அறுசமய சாத்திரப் ...... பொருளோனே அறிவுளறி வார்க்குணக் ...... கடலோனே குறுமுனிவ னேத்துமுத் ...... தமிழோனே குமரகுரு கார்த்திகைப் ...... பெருமாளே. |
* ஆறு சமயங்கள் - காணாபத்யம், செளரம், சைவம், வைணவம், சாக்தம், கெளமாரம்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 1299 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - இருக்க, பெருமாளே, கார்த்திகைப், தகிட