பாடல் 1301 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ்

ராகம் -
...; தாளம் -
தன்ன தனந்தன ...... தனதான |
பொன்னை விரும்பிய ......பொதுமாதர் புன்மை விரும்பியெ ...... தடுமாறும் என்னை விரும்பிநி ...... யொருகால்நின் எண்ணி விரும்பவு ...... மருள்வாயே மின்னை விரும்பிய ...... சடையாளர் மெய்யின் விரும்பிய ...... குருநாதா அன்னை விரும்பிய ...... குறமானை அண்மி விரும்பிய ...... பெருமாளே. |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 1301 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - விரும்பிய, விரும்பி, என்னை, பெருமாளே