பாடல் 1298 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ்

ராகம் -
ராமப்பரியா
தாளம் - திஸ்ர ஏகம் - 3
தாளம் - திஸ்ர ஏகம் - 3
தனனத் தத்தன ...... தனதான |
பரவைக் கெத்தனை ...... விசைதூது பகரற் குற்றவ ...... ரெனமாணுன் மரபுக் குச்சித ...... ப்ரபுவாக வரமெத் தத்தர ...... வருவாயே கரடக் கற்பக ...... னிளையோனே கலைவிற் கட்குற ...... மகள்கேள்வா அரனுக் குற்றது ...... புகல்வோனே அயனைக் குட்டிய ...... பெருமாளே. |
(அடியார் சுந்தரருக்காக) பரவை நாச்சியாரிடம் எத்தனைமுறை வேண்டுமானாலும் தூது போய் சொல்வதற்கு உடன்பட்டவர் இவர் (அதாவது இந்த முருகனின் தந்தையாகிய சிவபிரான்) என்னும் புகழினைப் பெற்ற உனது குலத்துக்கு ஏற்ற தகுதியும் பெருமையும் கொண்ட பெரியோனாக நீயும் விளங்கி, வரங்களை எனக்கு நிரம்பத் தருவதற்காக இங்கு எழுந்தருளி வருவாயாக. மதம்பாயும் சுவட்டை உடைய யானை முகத்தவனும், கற்பக விருட்சம்போலக் கேட்டதை அளிக்கும் கணபதியின் தம்பியே, மான் போன்றும் வில் போன்றும் கண்களை உடைய குறமகள் வள்ளியின் கணவனே, சிவபிரானுக்கு அழிவில்லா உண்மைப் பொருளை உபதேசித்தவனே, பிரமனைக் கைகளால் குட்டின பெருமாளே.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 1298 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - போன்றும், உடைய, பெருமாளே, கற்பக