பாடல் 1292 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ்

ராகம் -
...; தாளம் -
தானதனத் ...... தனதான |
தேனியல்சொற் ...... கணிமாதர் சேவைதனைக் ...... கருதாதே யானெனதற் ...... றிடுபோதம் யானறிதற் ...... கருள்வாயே வானவருக் ...... கரசான வாசவனுக் ...... கினியோனே ஆனைமுகற் ...... கிளையோனே ஆறுமுகப் ...... பெருமாளே. |
தேனின் இனிமைத் தன்மையைக் கொண்ட, சொல்லழகு உடைய பெண்களுக்குப் பணிவிடை செய்வதை நான் சிந்தியாது, யான் எனது (அகங்காரம், மமகாரம்) என்னும் இரண்டு பாசங்களும் நீங்குகின்ற ஞானத்தை நான் உணர்ந்து அறிந்துகொள்ள அருள்வாயாக. விண்ணோர்களுக்கு அரசனான இந்திரனுக்கு இனிய நண்பனே, யானை முகமுடைய கணபதிக்குத் தம்பியே, ஆறு முகமுடைய பெருமாளே.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 1292 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - முகமுடைய, நான், பெருமாளே