பாடல் 1293 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ்

ராகம் -
...; தாளம் -
தானதன தானனத் ...... தனதான |
நாரியர்க ளாசையைக் ...... கருதாதே நானுனிரு பாதபத் ...... மமுநாட ஆரமுத மானசர்க் ...... கரைதேனே ஆனஅநு பூதியைத் ...... தருவாயே காரணம தானவுத் ...... தமசீலா கானகுற மாதினைப் ...... புணர்வோனே சூரர்கிளை தூளெழப் ...... பொரும்வேலா தோகைமயில் வாகனப் ...... பெருமாளே. |
பெண்கள் மீதுள்ள ஆசையை எண்ணாமல், நான் உனது இரண்டு தாமரைத் திருவடிகளை விரும்பித் தேட, நிறைந்த அமுதம் என்று சொல்லும்படி, சர்க்கரை, தேன் என்னும்படியான இனிய அனுபவ ஞானத்தைத் தருவாயாக. அனைத்துக்கும் காரணனாக (மூலப் பொருளாக) இருக்கும் உத்தம சீலனே, காட்டில் வளர்ந்த குறப் பெண்ணாகிய வள்ளியை அணைந்தவனே, சூரனது சுற்றம் இறந்து தூளாகும்படி சண்டை செய்த வேலாயுதனே, அழகிய கலாபத்தை உடைய மயிலை வாகனமாகக் கொண்ட பெருமாளே.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 1293 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - பெருமாளே