பாடல் 1291 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ்

ராகம் -
ஹம்ஸாநந்தி
தாளம் - அங்கதாளம் - 7 1/2
தகிட-1 1/2, தக-1, தகதிமி-2, தகதிமிதக-3
தாளம் - அங்கதாளம் - 7 1/2
தகிட-1 1/2, தக-1, தகதிமி-2, தகதிமிதக-3
தய்யதன தானத் ...... தனதான |
துள்ளுமத வேள்கைக் ...... கணையாலே தொல்லைநெடு நீலக் ...... கடலாலே மெள்ளவரு சோலைக் ...... குயிலாலே மெய்யுருகு மானைத் ...... தழுவாயே தெள்ளுதமிழ் பாடத் ...... தெளிவோனே செய்யகும ரேசத் ...... திறலோனே வள்ளல்தொழு ஞானக் ...... கழலோனே வள்ளிமண வாளப் ...... பெருமாளே. |
குறிப்பு: முருகனிடம் காதல் கொண்டு வாடும் மகளுக்காக தாய் பாடும் பாட்டு.மன்மதன், அம்புகள், கடல், குயில் ஆகியவை விரகத்தைத் தூண்டுபவை என்பது குறிப்பு.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 1291 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - குறிப்பு, வரும், பெருமாளே