பாடல் 1290 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ்

ராகம் -
...; தாளம் -
தானத் தானன ...... தந்ததான |
தீதுற் றேயெழு ...... திங்களாலே தீயைத் தூவிய ...... தென்றலாலே போதுற் றாடும ...... நங்கனாலே போதப் பேதைந ...... லங்கலாமோ வேதத் தோனைமு ...... னிந்தகோவே வேடப் பாவைவி ...... ரும்புமார்பா ஓதச் சூதமெ ...... றிந்தவேலா ஊமைத் தேவர்கள் ...... தம்பிரானே. |
இடையூறு செய்யவே எழுகின்ற சந்திரனாலும், நெருப்பை அள்ளி வீசுகின்ற தென்றல் காற்றாலும், தனது மலர்ப் பாணங்களைச் செலுத்தி விளையாடும் மன்மதனாலும், அறிவுள்ள என் பெண் துயர் உறலாமோ? வேத நாயகனாகிய பிரமனை கோபித்த தலைவனே, வேடுவர் மகளான வள்ளி விரும்புகின்ற திரு மார்பனே, கடலிடையே இருந்த மாமரத்தை (சூரபத்மனை) பிளந்தெறிந்த வேலாயுதனே, (வல்லவனாகிய உன் முன்னே) வாயில்லாத ஊமைகளாய் உள்ள தேவர்களின் பெருமாளே.
இப்பாடல் அகத்துறையில், 'நாயக நாயகி' பாவத்தில் நாயகியின் நற்றாய் கூறுவதுபோல அமைந்தது.நிலவு, தென்றல், மன்மதன், மலர்ப் பாணங்கள் முதலியவை தலைவனின் பிரிவை மிகவும் அதிகமாக்கும் பொருட்கள்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 1290 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - மலர்ப், தென்றல்