பாடல் 1275 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ்

ராகம் -
பந்து வராளி
தாளம் - ஆதி
தாளம் - ஆதி
தானா தனதன தானா தனதன தானா தனதன ...... தனதான |
மூலா நிலமதின் மேலே மனதுறு மோகா டவிசுடர் ...... தனைநாடி மோனா நிலைதனை நானா வகையிலு மோதா நெறிமுறை ...... முதல்கூறும் லீலா விதமுன தாலே கதிபெற நேமா ரகசிய ...... வுபதேசம் நீடூ ழிதனிலை வாடா மணியொளி நீதா பலமது ...... தருவாயே நாலா ருசியமு தாலே திருமறை நாலா யதுசெப ...... மணிமாலை நாடாய் தவரிடர் கேடா வரிகரி நாரா யணர்திரு ...... மருகோனே சூலா திபர்சிவ ஞானார் யமனுதை காலார் தரவரு ...... குருநாதா தோதீ திகுதிகு தீதீ செகசெக சோதீ நடமிடு ...... பெருமாளே. |
(முதல் இரண்டு அடிகளை அன்வயப்படுத்தி பொருள் தரப்படுகிறது) மனத்தில் பொருந்தியுள்ள ஆசை என்ற காடு (வேறு வழிகளில் செல்லாமல்) மூலாதார நிலைக்கு மேல் உள்ள ஜோதியினை* நாடிச்சென்று, மெளன நிலையை, பலவகைகளிலும் கற்று, நன்னெறி வகைகளைக் காட்டுகின்ற உனது பலவகையான விளையாட்டுக்களை உன்னருளாலே யான் கண்டு முக்தி பெற, ஒழுக்க விதிக்கு உட்பட்ட ரகசிய உபதேசத்தின் பயன்தனை எனக்கு அருள்வாயாக. நீண்ட ஊழிக்காலத்தும் (எப்போதும்) தன் நிலை வாடாத சுயம்பிரகாச மணி ஜோதியே, நீதிமானே, பலவகையான இன்பச் சுவையமுதம் பருகிய உணர்ச்சியாலே, அழகிய வேதங்கள் நான்கையும், ஜெபமணிமாலை கொண்டு நாடிச் சென்று ஆராயும் தவ சிரேஷ்டர்களின் துன்பங்களை அழிப்பவனே, ஹரி ஹரி என்று ஓதப்படும் நாராயணரின், லக்ஷ்மியின் மருமகனே, சூலாயுதம் ஏந்திய தலைவரும், சிவஞானத்தினரும், காலனை உதைத்த திருவடியினருமான சிவ பெருமான் தந்தருள வந்த குருமூர்த்தியே, தோதீ திகுதிகு தீதீ செக என்ற தாளத்தில் ஜெகஜ்ஜோதியாக நடனம் செய்யும் பெருமாளே.
* ஆதாரங்களின் பெயர்களும், உடலில் இருக்கும் இடம், உரிய ஐம்பூதங்கள், அனுட்டிக்கும்போது மலர் வடிவங்களின் அமைப்பு, அக்ஷரக் குறிப்பு ஆகியவை கீழே தரப்பட்டுள்ளன. மேலும் இந்த ஆதாரங்களுக்கு உரிய தலங்கள், கடவுளர்கள் பெயர்களும் கொடுக்கப்பட்டுள்ளன.ஆதாரம்இடம்பூதம்வடிவம்அக்ஷரம்தலம்கடவுள்மூலாதாரம்குதம்மண்4 இதழ் கமலம்முக்கோணம்ஓம்திருவாரூர்விநாயகர்சுவாதிஷ்டானம்கொப்பூழ்அக்கினி6 இதழ் கமலம்லிங்கபீடம்நாற் சதுரம்ந (கரம்)திருவானைக்காபிரமன்மணிபூரகம்மேல்வயிறுநீர்10 இதழ் கமலம்பெட்டிப்பாம்புநடு வட்டம்ம (கரம்)திரு(வ)அண்ணாமலைதிருமால்அநாகதம்இருதயம்காற்று12 இதழ் கமலம்முக்கோணம்கமல வட்டம்சி (கரம்)சிதம்பரம்ருத்திரன்விசுத்திகண்டம்ஆகாயம்16 இதழ் கமலம்ஆறு கோணம்நடு வட்டம்வ (கரம்)திருக்காளத்திமகேசுரன்ஆக்ஞாபுருவத்தின் நடுமனம்3 இதழ் கமலம்ய (கரம்)காசி(வாரணாசி)சதாசிவன்பிந்து சக்கரம்(துவாதசாந்தம்,ஸஹஸ்ராரம்,பிரமரந்திரம்)கபாலத்தின்மேலே 1008இதழ் கமலம் திருக்கயிலைசிவ . சக்திஐக்கியம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 1275 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - இதழ், கரம், தானா, தனதன, பலவகையான, உரிய, பெருமாளே, பெயர்களும், திகுதிகு, தாலே, ரகசிய, நாலா, தோதீ, தீதீ