பாடல் 1274 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ்

ராகம் -
பாகேஸ்ரீ
தாளம் - அங்கதாளம் - 5 1/2
தகதிமி-2, தகிட-1 1/2, தகதிமி-2
தாளம் - அங்கதாளம் - 5 1/2
தகதிமி-2, தகிட-1 1/2, தகதிமி-2
தனதன தானத் தானன தனதன தானத் தானன தனதன தானத் தானன ...... தனதான |
முருகம யூரச் சேவக சரவண ஏனற் பூதரி முகுளப டீரக் கோமள ...... முலைமீதே முழுகிய காதற் காமுக பதிபசு பாசத் தீர்வினை முதியபு ராரிக் கோதிய ...... குருவேயென் றுருகியு மாடிப் பாடியு மிருகழல் நாடிச் சூடியு முணர்வினோ டூடிக் கூடியும் ...... வழிபாடுற் றுலகினொ ராசைப் பாடற நிலைபெறு ஞானத் தாலினி யுனதடி யாரைச் சேர்வது ...... மொருநாளே மருகனெ னாமற் சூழ்கொலை கருதிய மாமப் பாதகன் வரவிடு மாயப் பேய்முலை ...... பருகாமேல் வருமத யானைக் கோடவை திருகிவி ளாவிற் காய்கனி மதுகையில் வீழச் சாடிய ...... சதமாபுட் பொருதிரு கோரப் பாரிய மருதிடை போயப் போதொரு சகடுதை யாமற் போர்செய்து ...... விளையாடிப் பொதுவியர் சேரிக் கேவளர் புயல்மரு காவஜ் ராயுத புரமதில் மாபுத் தேளிர்கள் ...... பெருமாளே. |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 1274 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - அந்த, தானத், தானன, தனதன, சேர்ந்து, கொல்ல, வந்த, பெரிய, செய்த, முழுகிய, பெருமாளே, தகதிமி, மேல், வைத்த