பாடல் 1276 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ்

ராகம் -
...; தாளம் -
தனதனந் தனந்த தனதனந் தனந்த தனதனந் தனந்த ...... தனதான |
வரிபரந் திரண்டு நயனமுஞ் சிவந்து வதனமண் டலங்கள் ...... குறுவேர்வாய் மணிசிலம் பலம்ப அளகமுங் குலைந்து வசமழிந் திழிந்து ...... மயல்கூர இருதனங் குலுங்க இடைதுவண் டனுங்க இனியதொண் டையுண்டு ...... மடவார்தோள் இதமுடன் புணர்ந்து மதிமயங் கினும்பொ னிலகுநின் பதங்கள் ...... மறவேனே விரிபரந் தியங்கு முததியுங் கலங்க விடமினும் பிறந்த ...... தெனவானோர் வெருவிநெஞ் சமஞ்சி யுரனொடுந் தயங்கி விரைபதம் பணிந்து ...... முறையோவென் றுரைமறந் துணங்க அயில்தொடும் ப்ரசண்ட உயர்தலங் குலுங்க ...... வருதோகை ஒருபெருஞ் சிகண்டி மயிலமர்ந் திலங்கி உலகமும் புரந்த ...... பெருமாளே. |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 1276 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனதனந், தனந்த, இரண்டு, உடைய, பெருமாளே, குலுங்கி, பணிந்து, குலைந்து, குலுங்க, சிகண்டி