பாடல் 1273 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ்

ராகம் -
...; தாளம் -
தத்ததன தானனத் தத்ததன தானனத் தத்ததன தானனத் ...... தனதான |
முத்துமணி யாரமொய்த் திட்டஇரு கோடுமுற் பட்டகரி போலுமத் ...... தனமாதர் முற்றுமதி யார்முகத் துற்றமுனை வேலுறப் பட்டுமுகில் போல்மனத் ...... திருள்மூடிச் சுத்தமதி போய்வினைத் துட்டனவ னாய்மனத் துக்கமுற வேமிகச் ...... சுழலாதே சொற்கள்பல நாவினிற் றொட்டுனிரு தாடொழச் சொற்கமல வாழ்வுசற் ...... றருள்வாயே கொத்துமுடி யானபத் தற்றுவிழ வேகுறிப் புற்றஅதி கோபனச் ...... சுதன்மாயன் கொற்றமரு காகுறக் கொச்சைமற மாதினுக் கிச்சைமொழி கூறுநற் ...... குமரேசா பத்தியுட னேநினைத் தெத்துமடி யார்வினைப் பற்றுவிடு மாமறைப் ...... பொருளானாய் பத்திவர ஞானசொற் கற்றவர்கள் பாடுநற் பக்ஷபத தேவர்மெய்ப் ...... பெருமாளே. |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 1273 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தத்ததன, தானனத், மிக்க, சிறந்த, மனத்தில், நல்ல, போலவும், கற்றவர்கள், பெருமாளே, உள்ள