பாடல் 1272 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ்

ராகம் -
...; தாளம் -
தானதன தனத்ததந்த, தானதன தனத்ததந்த தானதன தனத்ததந்த ...... தனதான |
மாதர்மயல் தனிற்கலந்து காமபனி யெனப்புகுந்து மாடவிய லெனச்சுழன்று ...... கருவூறி மாறிபல வெனச்சுமந்து தேனுகுட மெனத்திரண்டு மாதமிது வெனத்தளர்ந்து ...... வெளியாகி வேதபுவி தனிற்கழன்று ஏனமென வெனத்தவழ்ந்து வீறுமணி களைப்புனைந்து ...... நடைமேலாய் வேணவித மெனத்திரிந்து நாறுபுழு குடற்றிமிர்ந்து வேசிவலை தனிற்கலந்து ...... மடிவேனோ ஆதிசர ணெனக்கயங்கு லாவமுத லையைக்கிடங்கி லாரவுடல் தனைப்பிளந்த ...... அரிநேமி ஆமைகய லெனச்செயங்கொள் கோலகுற ளரித்தடங்கை யானஅர வணைச்சயந்தன் ...... மருகோனே சோதியுரு வெனத்திரண்டு கோலஅரு ணையிற்கலந்த சோமனணி குடிற்சிலம்ப ...... னருள்பாலா தோகைமயி லெனச்சிறந்த ரூபிகுற மகட்கிரங்கி தோள்களிறு கிடப்புணர்ந்த ...... பெருமாளே. |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 1272 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தானதன, தனத்ததந்த, கொண்ட, ஆகிய, என்றும், வீசும், தனிற்கலந்து, பெருமாளே, திருமால்