பாடல் 127 - பழநி - திருப்புகழ்

ராகம் - தந்யாஸி ; தாளம் -
ஆதி
தனன தனதனன தனன தனதனன தனன தனதனன ...... தனதான |
கடலை பொரியவரை பலக னிகழைநுகர் கடின குடவுதர ...... விபா£த கரட தடமுமத நளின சிறுநயன கரிணி முகவரது ...... துணைவோனே வடவ ரையின்முகடு அதிர வொருநொடியில் வலம்வ ருமரகத ...... மயில்வீரா மகப திதருசுதை குறமி னொடிருவரு மருவு சரசவித ...... மணவாளா அடல சுரர்கள்குல முழுது மடியவுய ரமரர் சிறையைவிட ...... எழில்மீறும் அருண கிரணவொளி யொளிரு மயிலைவிடு மரக ரசரவண ...... பவலோலா படல வுடுபதியை யிதழி யணிசடில பசுப திவரநதி ...... அழகான பழநி மலையருள்செய் மழலை மொழிமதலை பழநி மலையில்வரு ...... பெருமாளே. |
* மும்மதங்கள்: இச்சை, கிரியை, ஞானம் என்ற மூன்று சக்திகளையும் மும்மதங்களாகக் கொண்டவர்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 127 - பழநி - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - பழநி, தனதனன, பெருமாளே, கடலை