பாடல் 128 - பழநி - திருப்புகழ்

ராகம் - தேஷ்; தாளம் -
அங்கதாளம் - 5 1/2
தகதிமி-2, தகிட-1 1/2, தகதிமி-2
தகதிமி-2, தகிட-1 1/2, தகதிமி-2
தனன தனத்த தாதத தனன தனத்த தானன தனன தனத்த தானன ...... தனதான |
கதியை விலக்கு மாதர்கள் புதிய இரத்ன பூஷண கனத னவெற்பு மேல்மிகு ...... மயலான கவலை மனத்த னாகிலும் உனது ப்ரசித்த மாகிய கனதன மொத்த மேனியு ...... முகமாறும் அதிப லவஜ்ர வாகுவும் அயில்நு னைவெற்றி வேலதும் அரவு பிடித்த தோகையு ...... முலகேழும் அதிர வரற்று கோழியும் அடியர் வழுத்தி வாழ்வுறும் அபிந வபத்ம பாதமு ...... மறவேனே இரவி குலத்தி ராசத மருவி யெதிர்த்து வீழ்கடு ரணமு கசுத்த வீரிய ...... குணமான இளைய வனுக்கு நீண்முடி அரச துபெற்று வாழ்வுற இதமொ டளித்த ராகவன் ...... மருகோனே பதினொ ருருத்தி ராதிகள் தபனம் விளக்கு மாளிகை பரிவொ டுநிற்கு மீசுர ...... சுரலோக பரிம ளகற்ப காடவி அரிய ளிசுற்று பூவுதிர் பழநி மலைக்குள் மேவிய ...... பெருமாளே. |
இப்பாடல் மிக அருமையானது. முருகனது அத்தனை உறுப்புக்களையும் தொகுத்து அளிக்கும் பாட்டு.(1) திருமேனி, (2) ஆறு முகங்கள், (3) தோள்கள், (4) வேல், (5) மயில், (6) கோழி, (7) திருவடிகள்.
* 11 ருத்திரர்கள் பின்வருமாறு: மஹாதேவன், ஹரன், ருத்திரன், சங்கரன், நீலலோஹிதன், ஈசான்யன், விஜயன், வீமதேவன், பவோத்பவன், கபாலி, ஸெளம்யன்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 128 - பழநி - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனத்த, பெருமாளே, உடைய, கற்பக, பழநி, உனது, தானன, கவலை, தகதிமி