பாடல் 1257 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ்

ராகம் -
...; தாளம் -
தத்ததன தான தத்த, தத்ததன தான தத்த தத்ததன தான தத்த ...... தனதான |
நற்குணமு ளார்த மைப்பொல் மைக்குழலி லேசி றக்க நற்பரிம ளாதி துற்ற ...... மலர்சூடி நச்சுவிழி யால்ம யக்கி யிச்சைபல பேசி யுற்று நற்பொருள வாம னத்தர் ...... வசமாகி வெற்பனைய மாத னத்தை பொற்புறவு றாவ ணைத்து மெத்தமய லாகி நித்த ...... மெலியாதே வெட்சிகமழ் நீப புஷ்ப வெற்றிசிறு பாத பத்ம மெய்க்கிருபை நீய ளிப்ப ...... தொருநாளே ரத்தினப ணாநி ருத்தன் மெய்ச்சுதனு நாடு மிக்க லக்ஷணகு மார சுப்ர ...... மணியோனே நற்றிசையு மேறி யிட்ட பொய்ச்சமணை வேர றுத்து நற்றிருநி றேப ரப்பி ...... விளையாடும் சற்சனகு மார வ்ருத்தி அற்புதசி வாய னுக்கொர் சற்குருவி நோத சித்ர ...... மயில்வீரா சக்ரதரன் மார்ப கத்தி லுக்ரமுட னேத ரித்த சத்தியடை யாள மிட்ட ...... பெருமாளே. |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 1257 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - கொண்ட, தத்த, என்னும், கொண்டு, தத்ததன, அழகு, குமார, பொருள், திருமாலின், மலர், நல்ல, நாள், பெருமாளே