பாடல் 1256 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ்

ராகம் -
...; தாளம் -
தத்தனா தனத்த தத்தனா தனத்த தத்தனா தனத்த ...... தனதான |
நச்சுவாள் விழிக்கொ டெற்றியே தனத்தை நத்துவார் சுகத்தில் ...... நலமாக நட்டமா மனத்தை யிட்டமே கொடுத்து நத்துவாழ் கடற்கு ...... ளணைபோலே கச்சமே செலுத்தி யச்சமே படுத்து கட்டஏழ் பிறப்பு ...... விடவேதான் கற்றநூ லுகக்க வெட்கமே செறித்த கட்டனே னினைப்ப ...... தொருநாளே இச்சையே செலுத்தி யுச்சிதாள் பலிக்கு மிட்டமா லவற்கு ...... மருகோனே எற்றுவா ரிதிக்குள் முற்றிநீள் பொருப்பை யெக்கிநேர் மடித்த ...... இளையோனே மெச்சவே புடைத்த முத்தமார் தனத்தி மிக்கவாள் படைத்த ...... விழியாலே வெட்டுமா மறத்தி யொக்கவே யிருக்க வெற்றிவே லெடுத்த ...... பெருமாளே. |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 1256 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தத்தனா, தனத்த, செலுத்தி, கொண்டு, சிறந்த, தமது, கண்களைக், வெட்கமே, மனத்தை, கொடுத்து, பெருமாளே