பாடல் 125 - பழநி - திருப்புகழ்

ராகம் - ....; தாளம் -
தான தான தனத்தன தத்தன தான தான தனத்தன தத்தன தான தான தனத்தன தத்தன ...... தனதான |
ஓடி யோடி யழைத்துவ ரச்சில சேடி மார்கள் பசப்பஅ தற்குமு னோதி கோதி முடித்தவி லைச்சுரு ...... ளதுகோதி நீடு வாச நிறைத்தஅ கிற்புழு கோட மீது திமிர்த்தத னத்தினில் நேச மாகி யணைத்தசி றுக்கிக ...... ளுறவாமோ நாடி வாயும் வயற்றலை யிற்புன லோடை மீதி னிலத்ததி வட்கையி னாத கீத மலர்த்துளி பெற்றளி ...... யிசைபாடுங் கோடு லாவி யமுத்துநி ரைத்தவை காவுர் நாட தனிற்பழ நிப்பதி கோதி லாத குறத்திய ணைத்தருள் ...... பெருமாளே. |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 125 - பழநி - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனத்தன, தத்தன, பெருமாளே, கோதி, மீது