பாடல் 1247 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ்

ராகம் -
ஆபோகி
தாளம் - சதுஸ்ர த்ருவம் - 14
- எடுப்பு - /4/4 0/4
தாளம் - சதுஸ்ர த்ருவம் - 14
- எடுப்பு - /4/4 0/4
தனதன தனதன தனதன தனதன தனதன ...... தனதான |
தவநெறி தவறிய குருடுகள் தலைபறி கதறிய ...... பரபாதத் தருமிகள் கருமிகள் வெகுவித சமயிக ளவரொடு ...... சருவாநின் றவனிவ னுவனுட னவளிவ ளுவளது இதுவுது ...... வெனுமாறற் றருவுரு வொழிதரு வுருவுடை யதுபதி தமியனு ...... முணர்வேனோ குவலய முழுவதும் மதிர்பட வடகுவ டிடிபட ...... வுரகேசன் கொடுமுடி பலநெரி தரநெடு முதுகுரை கடல்புனல் ...... வறிதாகத் துவல்கொடு முறையிடு சுரர்பதி துயரது கெடநிசி ...... சரர்சேனை துகளெழ நடநவில் மரகத துரகதம் வரவல ...... பெருமாளே. |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 1247 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனதன, என்றும், தலைவன், உருவம், பெருமாளே, முழுவதும்