பாடல் 1244 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ்

ராகம் -
...; தாளம் -
தனந்தான தானான தனந்தான தானான தனந்தான தானான ...... தனதான |
செழுந்தாது பார்மாது மரும்பாதி ரூபோடு சிறந்தியாதி லூமாசை ...... யொழியாத திறம்பூத வேதாள னரும்பாவ மேகோடி செயுங்காய நோயாள ...... னரகேழில் விழுந்தாழ வேமூழ்க இடுங்காலன் மேயாவி விடுங்கால மேநாயென் ...... வினைபாவம் விரைந்தேக வேவாசி துரந்தோடி யேஞான விளம்போசை யேபேசி ...... வரவேணும் அழுங்கோடி தேவார்க ளமர்ந்தார வானீடி அழன்றேகி மாசீத ...... நெடுவேலை அதிர்ந்தோட வேகாலன் விழுந்தோட வேகூர அலங்கார வேலேவு ...... முருகோனே கொழுங்கானி லேமாதர் செழுஞ்சேலை யேகோடு குருந்தேறு மால்மாயன் ...... மருகோனே குறம்பாடு வார்சேரி புகுந்தாசை மாதோடு குணங்கூடி யேவாழு ...... பெருமாளே. |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 1244 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனந்தான, தானான, யமன், விழுந்து, என்னை, ஆடைகளை, கோடிக், மேலும், மருகோனே, பெருமாளே, என்னும், நான்