பாடல் 1242 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ்

ராகம் -
...; தாளம் -
தானத்த தான தந்த தானத்த தான தந்த தானத்த தான தந்த ...... தனதான |
சீறிட்டு லாவு கண்கள் மாதர்க்கு நாள்ம ருண்டு சேவித்து மாசை கொண்டு ...... முழல்வேனைச் சீரிட்ட மாக நின்ற காசைக்கொ டாத பின்பு சீரற்று வாழு மின்பம் ...... நலியாதே ஆறெட்டு மாய்வி ரிந்து மாறெட்டு மாகி நின்று மாருக்கு மேவி ளம்ப ...... அறியாதே ஆகத்து ளேம கிழ்ந்த ஜோதிப்ர காச இன்பம் ஆவிக்கு ளேது லங்கி ...... அருளாதோ மாறிட்டு வான டுங்க மேலிட்டு மேல கண்டம் வாய்விட்டு மாதி ரங்கள் ...... பிளவாக வாள்தொட்டு நேர்ந டந்த சூர்வஜ்ர மார்பு நெஞ்சும் வான்முட்ட வீறு செம்பொன் ...... வரையோடு கூறிட்ட வேல பங்க வீரர்க்கு வீர கந்த கோதற்ற வேடர் தங்கள் ...... புனம்வாழுங் கோலப்பெண் வாகு கண்டு மாலுற்று வேளை கொண்டு கூடிக்கு லாவு மண்டர் ...... பெருமாளே. |
* 96 வகை தத்துவங்களில் சிவதத்துவங்கள் ஐந்து நீங்கிய மற்றவை 91. சிவதத்துவங்கள் இருந்தால் மனமும் புத்தியும் உழல்தல் இல்லை. 96 தத்துவங்கள் பின்வருமாறு:36 பரதத்துவங்கள் (அகநிலை): ஆத்ம தத்துவம் 24, வித்யா தத்துவம் 7, சிவ தத்துவம் 5.ஐம்பூதங்கள், அவற்றின் தன்மைகளோடு, ஐயைந்து - 25 (புறநிலை): மண், தீ, நீர், காற்று, வெளி.ஏனைய தத்துவங்கள் 35 (புறநிலை): வாயுக்கள் 10, நாடிகள் 10, கன்மங்கள் 5, அகங்காரம் 3, குணம் 3, வாக்குகள் 4.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 1242 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தானத்த, தத்துவம், கொண்டு, தந்த, சிவதத்துவங்கள், தத்துவங்கள், புறநிலை, விளங்கி, வாய்விட்டு, லாவு, நின்று, இன்பம், பெருமாளே, நாற்பத்து