பாடல் 1241 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ்

ராகம் -
கல்யாணி
தாளம் - கண்டசாபு - 2 1/2
தாளம் - கண்டசாபு - 2 1/2
தனதான தந்ததன தனதான தந்ததன தனதான தந்ததன ...... தனதான |
சிவஞான புண்டரிக மலர்மாது டன்கலவி சிவபோக மன்பருக ...... அறியாமற் செகமீது ழன்றுமல வடிவாயி ருந்துபொது திகழ்மாதர் பின்செருமி ...... யழிவேனோ தவமாத வங்கள்பயில் அடியார்க ணங்களொடு தயவாய்ம கிழ்ந்துதினம் ...... விளையாடத் தமியேன்ம லங்களிரு வினைநோயி டிந்தலற ததிநாளும் வந்ததென்முன் ...... வரவேணும் உவகாரி யன்பர்பணி கலியாணி யெந்தையிட முறைநாய கங்கவுரி ...... சிவகாமி ஒளிரானை யின்கரமில் மகிழ்மாது ளங்கனியை யொருநாள்ப கிர்ந்தவுமை ...... யருள்பாலா அவமேபி றந்தஎனை யிறவாம லன்பர்புகு மமுதால யம்பதவி ...... யருள்வோனே அழகாந கம்பொலியு மயிலாகு றிஞ்சிமகிழ் அயிலாபு கழ்ந்தவர்கள் ...... பெருமாளே. |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 1241 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனதான, தந்ததன, போற்றும், விளங்கும், தினமும், பெருமாளே, அன்பர்கள்