பாடல் 123 - பழநி - திருப்புகழ்

ராகம் - பேகடா; தாளம் -
அங்கதாளம் - 11
தகதகிட-2 1/2, தகதகிட-2 1/2, தகிட-1 1/2
தகிட-1 1/2, தகதிமிதக-3
தகதகிட-2 1/2, தகதகிட-2 1/2, தகிட-1 1/2
தகிட-1 1/2, தகதிமிதக-3
தனதனன தனதனன தானத் தானத் ...... தனதான தனதனன தனதனன தானத் தானத் ...... தனதான |
ஒருபொழுது மிருசரண நேசத் தேவைத் ...... துணரேனே உனதுபழ நிமலையெனு மூரைச் சேவித் ...... தறியேனே பெருபுவி லுயர்வரிய வாழ்வைத் தீரக் ...... குறியேனே பிறவியற நினைகுவனெ னாசைப் பாடைத் ...... தவிரேனோ துரிதமிடு நிருதர்புர சூறைக் காரப் ...... பெருமாளே தொழுதுவழி படுமடியர் காவற் காரப் ...... பெருமாளே விருதுகவி விதரணவி நோதக் காரப் ...... பெருமாளே விறன்மறவர் சிறுமிதிரு வேளைக் காரப் ...... பெருமாளே. |
ஒரு வேளை கூட உனது இரண்டு திருவடிகளிலும் அன்பையே வைத்து அறிய மாட்டேன். உன் பழநிமலை என்னும் பதியினை வணங்கி அறியமாட்டேன். இப்பெரிய பூமியில் உயர்ந்ததும், அருமையானதுமான வாழ்க்கையை முற்றுமாக யான் குறிக்கொள்ளவில்லை. (இவ்வளவு குறைகளிருந்தும்) பிறவி ஒழியவேண்டும் என்று நினைக்கிறேன். என் ஆசைப்பாடுகளை ஒழிக்க மாட்டேனோ? பாவத் தொழில்களையே செய்யும் அசுரர்களின் ஊர்களை சூறாவளி போல் வீசியடித்த பெருமாளே, உனை வணங்கி வழிபடுகின்ற அடியார்களுக்கு காவற்காரனாக இருந்து உதவும் பெருமாளே, வெற்றிக் கவிகளை உலகுக்கு உதவிய அற்புத மூர்த்தியாகிய (ஞானசம்பந்தப்)* பெருமாளே, வீரம் வாய்ந்த குறவர்களின் மகள் வள்ளிக்கு தக்க சமயத்தில் காவலாயிருந்த பெருமாளே.
* முருகனே ஞானசம்பந்த மூர்த்தியாக அவதரித்தார் என்று பல இடங்களில் அருணகிரியார் கூறுகிறார்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 123 - பழநி - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - பெருமாளே, காரப், தானத், தனதனன, வணங்கி, தகிட, தகதகிட, தனதான