பாடல் 122 - பழநி - திருப்புகழ்

ராகம் - ஸெளராஷ்டிரம்;
தாளம் - அங்கதாளம் - 8 1/2
தகதகிட-2 1/2, தகிட-1 1/2, தகிட-1 1/2
தகதிமிதக-3
தகதகிட-2 1/2, தகிட-1 1/2, தகிட-1 1/2
தகதிமிதக-3
தனதனன தான தந்த ...... தனதான தனதனன தான தந்த ...... தனதான |
உலகபசு பாச தொந்த ...... மதுவான உறவுகிளை தாயர் தந்தை ...... மனைபாலர் மலசலசு வாச சஞ்ச ...... லமதாலென் மதிநிலைகெ டாம லுன்ற ...... னருள்தாராய் சலமறுகு பூளை தும்பை ...... யணிசேயே சரவணப வாமு குந்தன் ...... மருகோனே பலகலைசி வாக மங்கள் ...... பயில்வோனே பழநிமலை வாழ வந்த ...... பெருமாளே. |
உலகத்தில் உயிர், பாசம் இவை சம்பந்தப்பட்ட உற்றோரும், சுற்றத்தாரும், தாய், தந்தை, மனைவி, மக்கள், மல, மூத்திர, மூச்சு முதலிய உபாதைகளால் எனது புத்திநிலை கெடாதவாறு உனது திருவருளைத் தந்தருள்வாயாக. கங்கை நீர், அறுகம்புல், பூளைச்செடியின் பூ, தும்பைப் பூ இவைகளை அணியும் சிவபெருமானின் குமாரனே, சரவணபவனே, திருமாலின் மருமகனே, பல கலைகளாலும், சிவாகமங்களாலும் புகழப்படுவோனே, பழனிமலையில் வீற்றிருக்கும் பெருமாளே.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 122 - பழநி - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தந்தை, பெருமாளே, தனதான, தந்த, தனதனன, தகிட