பாடல் 1227 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ்

ராகம் -
...; தாளம் -
தத்தத் தனத்ததன தத்தத் தனத்ததன தத்தத் தனத்த ...... தனதான |
கட்டக் கணப்பறைகள் கொட்டக் குலத்திளைஞர் கட்டிப் புறத்தி ...... லணைமீதே கச்சுக் கிழித்ததுணி சுற்றிக் கிடத்தியெரி கத்திக் கொளுத்தி ...... யனைவோரும் சுட்டுக் குளித்துமனை புக்கிட் டிருப்பரிது சுத்தப் பொயொப்ப ...... துயிர்வாழ்வு துக்கப் பிறப்பகல மிக்கச் சிவத்ததொரு சொர்க்கப் பதத்தை ...... யருள்வாயே எட்டுக் குலச்சயில முட்டத் தொளைத்தமரர் எய்ப்புத் தணித்த ...... கதிர்வேலா எத்திக் குறத்தியிரு முத்தத் தனக்கிரியை யெற்பொற் புயத்தி ...... லணைவோனே வட்டக் கடப்பமலர் மட்டுற்ற செச்சைமலர் வைத்துப் பணைத்த ...... மணிமார்பா வட்டத் திரைக்கடலில் மட்டித் தெதிர்த்தவரை வெட்டித் துணித்த ...... பெருமாளே. |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 1227 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தத்தத், மலர், மாலையையும், அழகிய, வந்த, தனத்ததன, பெருமாளே, அசுரர்களை