பாடல் 1220 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ்

ராகம் -
பூபாளம்
தாளம் - அங்கதாளம் - 5
தக-1, தகிட-1 1/2, தகிட-1 1/2, தக-1
தாளம் - அங்கதாளம் - 5
தக-1, தகிட-1 1/2, தகிட-1 1/2, தக-1
தனதனன தந்தனம் தனதனன தந்தனம் தனதனன தந்தனம் ...... தந்ததான |
இனமறைவி தங்கள்கொஞ் சியசிறுச தங்கைகிண் கிணியிலகு தண்டையம் ...... புண்டா£கம் எனதுமன பங்கயங் குவளைகுர வம்புனைந் திரவுபகல் சந்ததஞ் ...... சிந்தியாதோ உனதருளை யன்றியிங் கொருதுணையு மின்றிநின் றுளையுமொரு வஞ்சகன் ...... பஞ்சபூத உடலதுசு மந்தலைந் துலகுதொறும் வந்துவந் துழலுமது துன்புகண் ...... டன்புறாதோ கனநிவத தந்தசங் க்ரமகவள துங்கவெங் கடவிகட குஞ்சரந் ...... தங்கும்யானை கடகசயி லம்பெறும் படியவுணர் துஞ்சமுன் கனககிரி சம்பெழுந் ...... தம்புராசி அனலெழமு னிந்தசங் க்ரமமதலை கந்தனென் றரனுமுமை யும்புகழ்ந் ...... தன்புகூர அகிலபுவ னங்களுஞ் சுரரொடுதி ரண்டுநின் றரிபிரமர் கும்பிடுந் ...... தம்பிரானே. |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 1220 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தந்தனம், தனதனன, மீண்டும், மீது, இருந்த, ஆகிய, அன்பு, உனது, தாமரை, என்னும், தகிட, நின்று