பாடல் 1218 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ்

ராகம் -
...; தாளம் -
தனதன தான தானன, தனதன தான தானன தனதன தான தானன ...... தனதான |
இருகுழை மீது தாவடி யிடுவன வோதி நீழலி னிடமது லாவி மீள்வன ...... நுதல்தாவி இழிவன காம வேதமு மொழிவன தாரை வேலென எறிவன காள கூடமு ...... மமுதாகக் கருகிய நீல லோசன அபிநய மாத ரார்தரு கலவியில் மூழ்கி வாடிய ...... தமியேனுங் கதிபெற ஈட றாதன பதிபசு பாச மானவை கசடற வேறு வேறுசெய் ...... தருள்வாயே ஒருபது பார மோலியு மிருபது வாகு மேருவு முததியில் வீழ வானர ...... முடனேசென் றொருகணை யேவு ராகவன் மருகவி பூதி பூஷணர் உணருப தேச தேசிக ...... வரையேனற் பரவிய கான வேடுவர் தருமபி ராம நாயகி பரிபுர பாத சேகர ...... சுரராஜன் பதிகுடி யேற வேல்தொடு முருகம யூர வாகன பரவச ஞான யோகிகள் ...... பெருமாளே. |
* துங்கபத்திரை நதிக்கு வட திசையில் உள்ள ஞானபுரத்தில் கெளசிக முனிவர் தத்துவ ஞானம் கைகூட வேண்டி சரவணபவ மந்திரத்தைத் தியானித்துக் குகப் பெருமானை நோக்கிக் கடுந் தவம் புரிந்தார். கந்தக் கடவுள் ஞானாசாரிய மூர்த்தியாகத் தோன்றிச் சிவஞானம் எனப்படும் பதி ஞானமே தெளிவை உண்டாக்கும் என்று உபதேசித்தார். அதனால் ஞான தேசிக மூர்த்தி எனப் பெயர் பெற்றார்.இந்தப் பதி ஞானம் தான் பரம ஞானம், சிவ ஞானம், குக ஞானம், தத்துவ ஞானம், திருவடி ஞானம், அருள் ஞானம், அத்துவித ஞானம், மெய்யுணர்ச்சி எனப் பலவாறு கூறப்படும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 1218 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - ஞானம், உள்ள, தனதன, தானன, வள்ளி, அணிந்த, தத்துவ, செலுத்திய, எனப், எனப்படும், தேசிக, பெருமாளே, அழகிய, கடவுள், அருள்