பாடல் 1216 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ்

ராகம் -
...; தாளம் -
தானதன தானத்த தானதன தானத்த தானதன தானத்த ...... தனதான |
ஆலுமயில் போலுற்ற தோகையர்க ளேமெத்த ஆரவட மேலிட்ட ...... முலைமீதே ஆனதுகி லேயிட்டு வீதிதனி லேநிற்க ஆமவரை யேசற்று ...... முரையாதே வேலுமழ கார்கொற்ற நீலமயில் மேலுற்று வீறுமுன தார்பத்ம ...... முகமாறு மேவியிரு பாகத்தும் வாழுமனை மார்தக்க மேதகவு நானித்த ...... முரையேனோ நாலுமுக வேதற்கு மாலிலையில் மாலுக்கு நாடவரி யார்பெற்ற ...... வொருபாலா நாணமுடை யாள்வெற்றி வேடர்குல மீதொக்க நாடுகுயில் பார்மிக்க ...... எழில்மாது வேலைவிழி வேடச்சி யார்கணவ னேமத்த வேழமுக வோனுக்கு ...... மிளையோனே வீரமுட னேயுற்ற சூரனணி மார்பத்து வேலைமிக வேவிட்ட ...... பெருமாளே. |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 1216 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - கொண்ட, தானத்த, தானதன, நான், உனது, உள்ள, பெருமாளே, மயில், மீது