பாடல் 1215 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ்

ராகம் -
...; தாளம் -
தான தாத்த தனதன தான தாத்த தனதன தான தாத்த தனதன ...... தனதான |
ஆல மேற்ற விழியினர் சால நீட்டி யழுதழு தாக மாய்க்க முறைமுறை ...... பறைமோதி ஆடல் பார்க்க நிலையெழு பாடை கூட்டி விரையம யான மேற்றி யுறவின ...... ரயலாகக் கால மாச்சு வருகென ஓலை காட்டி யமபடர் காவ லாக்கி யுயிரது ...... கொடுபோமுன் காம வாழ்க்கை பொடிபட ஞானம் வாய்த்த கழலிணை காத லாற்க ருதுமுணர் ...... தருவாயே வேல கீர்த்தி விதரண சீலர் வாழ்த்து சரவண வியாழ கோத்ர மருவிய ...... முருகோனே வேடர் நாட்டில் விளைபுன ஏனல் காத்த சிறுமியை வேட மாற்றி வழிபடு ...... மிளையோனே ஞால மேத்தி வழிபடு மாறு பேர்க்கு மகவென நாணல் பூத்த படுகையில் ...... வருவோனே நாத போற்றி யெனமுது தாதை கேட்க அநுபவ ஞான வார்த்தை யருளிய ...... பெருமாளே. |
* வள்ளியைக் காண முருகன் பூண்ட வேடங்கள்: வேடன், வளையல் செட்டி, வேங்கை, கிழவன் முதலியன.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 1215 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தாத்த, தனதன, போற்றி, கொண்டு, உனது, உண்மையான, யாவரும், காவல், கேட்க, காட்டி, வழிபடு, நாணல், பெருமாளே