பாடல் 1213 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ்

ராகம் -
...; தாளம் -
தானத் தனத்ததன தானத் தனத்ததன தானத் தனத்ததன ...... தனதான |
ஆசைக் கொளுத்திவெகு வாகப் பசப்பிவரு மாடைப் பணத்தையெடெ ...... னுறவாடி ஆரக் கழுத்துமுலை மார்பைக் குலுக்கிவிழி யாடக் குலத்துமயில் ...... கிளிபோலப் பேசிச் சிரித்துமயிர் கோதிக் குலைத்துமுடி பேதைப் படுத்திமய ...... லிடுமாதர் பீறற் சலத்துவழி நாறப் படுத்தியெனை பீடைப் படுத்துமய ...... லொழியாதோ தேசத் தடைத்துபிர காசித் தொலித்துவரி சேடற் பிடுத்துதறு ...... மயில்வீரா தேடித் துதித்தஅடி யார்சித் தமுற்றருளு சீர்பொற் பதத்தஅரி ...... மருகோனே நேசப் படுத்தியிமை யோரைக் கெடுத்தமுழு நீசற் கனத்தமுற ...... விடும்வேலா நேசக் குறத்திமய லோடுற் பவித்தபொனி நீர்பொற் புவிக்குள்மகிழ் ...... பெருமாளே. |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 1213 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தானத், தனத்ததன, வள்ளி, மயில், பெருமாளே, பேசி