பாடல் 1206 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ்

ராகம் -
...; தாளம் -
தனன தானனம் தனன தானனம் தனன தானனம் ...... தனதான |
அயில்வி லோசனங் குவிய வாசகம் பதற ஆனனங் ...... குறுவேர்வுற் றளக பாரமுங் குலைய மேல்விழுந் ததர பானமுண் ...... டியல்மாதர் சயில பாரகுங் குமப யோதரந் தழுவு மாதரந் ...... தமியேனால் தவிரொ ணாதுநின் கருணை கூர்தருந் தருண பாதமுந் ...... தரவேணும் கயிலை யாளியுங் குலிச பாணியுங் கமல யோனியும் ...... புயகேசன் கணப ணாமுகங் கிழிய மோதுவெங் கருட வாகனந் ...... தனிலேறும் புயலி லேகரும் பரவ வானிலும் புணரி மீதுனுங் ...... கிரிமீதும் பொருநி சாசரன் தனது மார்பினும் புதைய வேல்விடும் ...... பெருமாளே. |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 1206 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தானனம், நீக்க, தலைவனான, மீதும், வேண்டும், மேல், கருணை, கருட, பெருமாளே