பாடல் 1205 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ்

ராகம் -
...; தாளம் -
தத்தன தான தானன தத்தன தான தானன தத்தன தான தானன ...... தனதான |
அப்படி யேழு மேழும்வ குத்துவ ழாது போதினி னக்ரம்வி யோம கோளகை ...... மிசைவாழும் அக்ஷர தேவி கோவின்வி திப்படி மாறி மாறிய னைத்துரு வாய காயம ...... தடைவேகொண் டிப்படி யோனி வாய்தொறு முற்பவி யாவி ழாவுல கிற்றடு மாறி யேதிரி ...... தருகாலம் எத்தனை யூழி காலமெ னத்தெரி யாது வாழியி னிப்பிற வாது நீயருள் ...... புரிவாயே கற்பக வேழ மேய்வன பச்சிள ஏனல் மீதுறை கற்புடை மாது தோய்தரு ...... மபிராம கற்புர தூளி லேபன மற்புய பாக சாதன கற்பக லோக தாரண ...... கிரிசால விப்ரச மூக வேதன பச்சிம பூமி காவல வெட்சியு நீப மாலையு ...... மணிவோனே மெத்திய ஆழி சேறெழ வெற்பொடு சூர னீறெழ விக்ரம வேலை யேவிய ...... பெருமாளே. |
* கீழ் உலகங்கள் ஏழு: அதலம், விதலம், சுதலம், தராதலம், மகாதலம், ரசாதலம், பாதாளம்.மேல் உலகங்கள் ஏழு: பூலோகம், புவலோகம், சுவலோகம், ஜனலோகம், தபோலோகம், மகாலோகம், சத்திய லோகம்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 1205 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - மாறி, தத்தன, கற்பக, உள்ள, தானன, கூட்டத்தில், உலகங்கள், பெருமாளே, எத்தனை, நான், காலம்