பாடல் 1204 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ்

ராகம் -
...; தாளம் -
தனதன தாத்தன தனதன தாத்தன தனதன தாத்தன ...... தனதான |
அடியில்வி டாப்பிண மடையவி டாச்சிறி தழியுமுன் வீட்டுமு ...... னுயர்பாடை அழகொடு கூட்டுமி னழையுமின் வார்ப்பறை யழுகையை மாற்றுமி ...... னொதியாமுன் எடுமினி யாக்கையை யெனஇடு காட்டெரி யிடைகொடு போய்த்தமர் ...... சுடுநாளில் எயினர்கு லோத்தமை யுடன்மயில் மேற்கடி தெனதுயிர் காத்திட ...... வரவேணும் மடுவிடை போய்ப்பரு முதலையின் வாய்ப்படு மதகரி கூப்பிட ...... வளையூதி மழைமுகில் போற்கக பதிமிசை தோற்றிய மகிபதி போற்றிடு ...... மருகோனே படர்சடை யாத்திகர் பரிவுற ராட்சதர் பரவையி லார்ப்பெழ ...... விடும்வேலாற் படமுனி யாப்பணி தமனிய நாட்டவர் பதிகுடி யேற்றிய ...... பெருமாளே. |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 1204 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனதன, தாத்தன, உடைய, மேல், கூப்பிட, முதலையின், பெருமாளே