பாடல் 1189 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ்

ராகம் -
...; தாளம் -
தானதன தான தத்த தானதன தான தத்த தானதன தான தத்த ...... தனதான |
மாறுபொரு கால னொக்கும் வானிலெழு மாம திக்கும் வாரிதுயி லாவ தற்கும் ...... வசையேசொல் மாயமட வார்த மக்கும் ஆயர்குழ லூதி சைக்கும் வாயுமிள வாடை யிற்கு ...... மதனாலே வேறுபடு பாய லுக்கு மேயெனது பேதை யெய்த்து வேறுபடு மேனி சற்று ...... மழியாதே வேடர்குல மாதி னுக்கு வேடைகெட வேந டித்து மேவுமிரு பாத முற்று ...... வரவேணும் ஆறுமிடை வாள ரக்கர் நீறுபட வேலெ டுத்த ஆறுமுக னேகு றத்தி ...... மணவாளா ஆழியுல கேழ டக்கி வாசுகியை வாய டக்கி ஆலுமயி லேறி நிற்கு ...... மிளையோனே சீறுபட மேரு வெற்பை நீறுபட வேசி னத்த சேவலவ நீப மொய்த்த ...... திரள்தோளா சேருமட லால்மி குத்த சூரர்கொடு போய டைத்த தேவர்சிறை மீள விட்ட ...... பெருமாளே. |
* ஆறு கெட்ட குணங்கள்: காமம், குரோதம், மோகம், லோபம், மதம், மாற்சர்யம். இப்பாடல் அகத்துறையில் 'நாயக நாயகி' பாவத்தில் நாயகியின் நற்றாய் கூறுவதுபோல அமைந்தது.சந்திரன், கடல் ஓசை, வசை பேசும் மாதர், குழல் ஓசை, வாடைக் காற்று, தனிப் படுக்கை முதலியவை தலைவனின் பிரிவை மிகவும் அதிகமாக்கும் பொருட்கள்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 1189 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தானதன, தத்த, பெண், படுக்கை, விளங்கும், கெட்ட, வாடைக், வள்ளியின், கடல், வேறுபடு, நீறுபட, டக்கி, பெருமாளே, குழல்