பாடல் 1188 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ்

ராகம் -
சங்கராபரணம்
தாளம் - அங்கதாளம் - 6 1/2
தகதகிட-2 1/2, தகதிமி-2, தகதிமி-2
தாளம் - அங்கதாளம் - 6 1/2
தகதகிட-2 1/2, தகதிமி-2, தகதிமி-2
தாந்தான தந்தன தந்தன தாந்தான தந்தன தந்தன தாந்தான தந்தன தந்தன ...... தனதான |
மாண்டாரெ லும்பணி யுஞ்சடை யாண்டாரி றைஞ்ச மொழிந்ததை வான்பூத லம்பவ னங்கனல் ...... புனலான வான்பூத முங்கர ணங்களு நான்போயொ டுங்கஅ டங்கலு மாய்ந்தால்வி ளங்கும தொன்றினை ...... யருளாயேல் வேண்டாமை யொன்றைய டைந்துள மீண்டாறி நின்சர ணங்களில் வீழந்தாவல் கொண்டுரு கன்பினை ...... யுடையேனாய் வேந்தாக டம்புபு னைந்தருள் சேந்தாச ரண்சர ணென்பது வீண்போம தொன்றல என்பதை ...... யுணராதோ ஆண்டார்த லங்கள ளந்திட நீண்டார்மு குந்தர்த டந்தனில் ஆண்டாவி துஞ்சிய தென்றுமு ...... தலைவாயுற் றாங்கோர்சி லம்புபு லம்பிட ஞான்றூது துங்கச லஞ்சலம் ஆம்பூமு ழங்கிய டங்கும ...... ளவில்நேசம் பூண்டாழி கொண்டுவ னங்களி லேய்ந்தாள வென்றுவெ றுந்தனி போந்தோல மென்றுத வும்புயல் ...... மருகோனே பூம்பாளை யெங்கும ணங்கமழ் தேங்காவில் நின்றதொர் குன்றவர் பூந்தோகை கொங்கைவி ரும்பிய ...... பெருமாளே. |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 1188 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தந்தன, என்னும், அந்த, தாந்தான, நான், ஒப்பற்ற, அடைந்து, வாயில், அழகிய, இருந்த, எல்லாம், அன்பு, மனம், வேண்டாமை, வான்பூத, என்பதை, பெருமாளே, பொருளை, ஆகிய, தகதிமி