பாடல் 1185 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ்

ராகம் -
...; தாளம் -
தனன தனதன தனத்தா தன தனன தனதன தனத்தா தன தனன தனதன தனத்தா தன ...... தனதான |
மதன தனுநிக ரிடைக்கே மன முருக வருபிடி நடைக்கே யிரு வனச பரிபுர மலர்க்கே மது ...... கரம்வாழும் வகுள ம்ருகமத மழைக்கே மணி மகர மணிவன குழைக்கே மட மகளிர் முகுளித முலைக்கே கட ...... லமுதூறும் அதர மதுரித மொழிக்கே குழை யளவு மளவிய விழிக்கே தள வனைய தொருசிறு நகைக்கே பனி ...... மதிபோலும் அழகு திகழ்தரு நுதற்கே யந வரத மவயவ மனைத்தூ டினு மவச முறுமயல் தவிர்த்தாள் வது ...... மொருநாளே உததி புதைபட அடைத்தா தவன் நிகரி லிரதமும் விடுக்கா நகர் ஒருநொ டியில்வெயி லெழச்சா நகி ...... துயர்தீர உபய வொருபது வரைத்தோள் களு நிசிச ரர்கள்பதி தசக்¡£ வமு முருள ஒருகணை தெரித்தா னும ...... வுனஞான திதமி லவுணர்த மிருப்பா கிய புரமு மெரியெழ முதற்பூ தர திலத குலகிரி வளைத்தா னும ...... கிழவானோர் திருவ நகர்குடி புகச்சீ கர மகர சலமுறை யிடச்சூ ரொடு சிகர கிரிபொடி படச்சா டிய ...... பெருமாளே. |
* திரிபுரத்தில் இருந்த அசுரர்கள் சிவ பூஜையை விட்டால் ஒழிய அவர்களை வெல்ல முடியாது என உணர்ந்த திருமால், புத்த ஆசாரியராகவும், நாரதர் அவர் மாணாக்கர் ஆகவும் போந்து, அசுரர்களை மயக்கிச் சிவபூஜையை கைவிடச் செய்தனர். ஆனால் மூன்று அசுரர்கள் மட்டும் சிவ நெறியிலேயே இருந்து ஒழுகி இறக்காமல் தப்பினர்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 1185 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - மீதும், தனதன, ஒப்பற்ற, மலர், தனத்தா, கடல், அசுரர்கள், இல்லாத, அழகு, பெருமாளே