பாடல் 1184 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ்

ராகம் -
...; தாளம் -
தந்தானந் தாத்தந் தனதன தந்தானந் தாத்தந் தனதன தந்தானந் தாத்தந் தனதன ...... தனதான |
மங்காதிங் காக்குஞ் சிறுவரு முண்டேயிங் காற்றுந் துணைவியும் வம்பாருந் தேக்குண் டிடவறி ...... தெணும்வாதை வந்தேபொன் தேட்டங் கொடுமன நொந்தேயிங் காட்டம் பெரிதெழ வண்போதன் தீட்டுந் தொடரது ...... படியேமன் சங்காரம் போர்ச்சங் கையிலுடல் வெங்கானம் போய்த்தங் குயிர்கொள சந்தேகந் தீர்க்குந் தனுவுட ...... னணுகாமுன் சந்தாரஞ் சாத்தும் புயவியல் கந்தாஎன் றேத்தும் படியென சந்தாபந் தீர்த்தென் றடியிணை ...... தருவாயே கங்காளன் பார்த்தன் கையிலடி யுண்டேதிண் டாட்டங் கொளுநெடு கன்சாபஞ் சார்த்துங் கரதல ...... னெருதேறி கந்தாவஞ் சேர்த்தண் புதுமல ரம்பான்வெந் தார்ப்பொன் றிடவிழி கண்டான்வெங் காட்டங் கனலுற ...... நடமாடி அங்காலங் கோத்தெண் டிசைபுவி மங்காதுண் டாற்கொன் றதிபதி அந்தாபந் தீர்த்தம் பொருளினை ...... யருள்வோனே அன்பாலந் தாட்கும் பிடுமவர் தம்பாவந் தீர்த்தம் புவியிடை அஞ்சாநெஞ் சாக்கந் தரவல ...... பெருமாளே. |
* அர்ச்சுனன் இமயமலையில் தவம் செய்திருந்த போது, துரியோதனன் ஏவ, மூகன் என்னும் அசுரன் பன்றி உருவம் கொண்டு அவனைக் கொல்ல வந்தான். அதை அறிந்த சிவபெருமான் வேட உருவம் கொண்டு அப்பன்றியின் பின் பாகத்தைப் பிளந்தார். இதை அறியாத அர்ச்சுனன் பன்றி வருவதைக் கண்டு அதன் முகத்தில் ஒரு அம்பைச் செலுத்தினான். முன்பு நீ எப்படி அம்பைத் தொடுத்தாய் என்று சிவனுக்கும், அர்ச்சுனனுக்கும் விற்போர் நடந்தது. நாண் அறுபட அர்ச்சுனன் சிவனை நாண் அறுந்த வில் தண்டால் அடித்தான்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 1184 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - என்னும், தீர்த்து, அர்ச்சுனன், அழகிய, கொண்டு, தாத்தந், தனதன, தந்தானந், பன்றி, நாண், உருவம், அந்த, வல்ல, தீர்த்தம், பெருமாளே, சேர்த்து, வில், வைத்துள்ள