பாடல் 1186 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ்

ராகம் -
தோடி
தாளம் - திஸ்ர ஏகம் - 3
தாளம் - திஸ்ர ஏகம் - 3
தனதானன தனதானன தனதானன தனதானன தனதானன தனதானன ...... தனதான |
மதனேவிய கணையாலிரு வினையால்புவி கடல்சாரமும் வடிவாயுடல் நடமாடுக ...... முடியாதேன் மனமாயையொ டிருகாழ்வினை யறமூதுடை மலம்வேரற மகிழ்ஞானக அநுபூதியி ...... னருள்மேவிப் பதமேவுமு னடியாருடன் விளையாடுக அடியேன்முனெ பரிபூரண கிருபாகர ...... முடன்ஞான பரிமேலழ குடனேறிவி ணவர்பூமழை யடிமேல்விட பலகோடிவெண் மதிபோலவெ ...... வருவாயே சதகோடிவெண் மடவார்கட லெனசாமரை யசையாமுழு சசிசூரியர் சுடராமென ...... வொருகோடிச் சடைமாமுடி முநிவோர்சர ணெனவேதியர் மறையோதுக சதிநாடக மருள்வேணிய ...... னருள்பாலா விதியானவ னிளையாளென துளமேவிய வளிநாயகி வெகுமாலுற தனமேலணை ...... முருகோனே வெளியாசையொ டடைபூவணர் மருகாமணி முதிராடக வெயில்வீசிய அழகாதமிழ் ...... பெருமாளே. |
* பிரமன் திருமாலின் மைந்தன். வள்ளி திருமாலின் புத்திரியாகிய சுந்தரவல்லியின் மறு பிறப்பு. எனவே வள்ளி பிரமனின் தங்கை.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 1186 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனதானன, பட்டும், திருமாலின், வள்ளி, எல்லாம், பிரமனின், கோடிக்கணக்கான, உள்ளத்தில், பெருமாளே, நல்வினை, தீவினை, ஆகிய, ஞானம்