பாடல் 1183 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ்

ராகம் -
...; தாளம் -
தனன தனதன தனத்தத் தாத்தன தனன தனதன தனத்தத் தாத்தன தனன தனதன தனத்தத் தாத்தன ...... தனதான |
பொருத கயல்விழி புரட்டிக் காட்டுவர் புளக தனவட மசைத்துக் காட்டுவர் புயலி னளகமும் விரித்துக் காட்டுவர் ...... பொதுமாதர் புனித விதழ்மது நகைத்துக் காட்டுவர் பொலிவி னிடைதுகில் குலைத்துக் காட்டுவர் புதிய பரிபுர நடித்துக் காட்டுவ ...... ரிளைஞோரை உருக அணைதனி லணைத்துக் காட்டுவர் உடைமை யடையவெ பறித்துத் தாழ்க்கவெ உததி யமுதென நிகழ்த்திக் கேட்பவர் ...... பொடிமாயம் உதர மெரிதர மருத்திட் டாட்டிகள் உயிரி னிலைகளை விரித்துச் சேர்ப்பவர் உறவு கலவியை விடுத்திட் டாட்கொள ...... நினையாதோ மருது பொடிபட வுதைத்திட் டாய்ச்செரி மகளி ருறிகளை யுடைத்துப் போட்டவர் மறுக வொருகயி றடித்திட் டார்ப்புற ...... அழுதூறும் வளரு நெடுமுகி லெதிர்த்துக் காட்டென அசட னிரணிய னுரத்தைப் பேர்த்தவன் மழையி னிரைமலை யெடுத்துக் காத்தவன் ...... மருகோனே விருது பலபல பிடித்துச் சூர்க்கிளை விகட தடமுடி பறித்துத் தோட்களை விழவு முறியவு மடித்துத் தாக்கிய ...... அயில்வீரா வெகுதி சலதியை யெரித்துத் தூட்பட வினைசெ யசுரர்கள் பதிக்குட் பாய்ச்சிய விபுத மலரடி விரித்துப் போற்றினர் ...... பெருமாளே. |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 1183 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - காட்டுவர், தனதன, தாத்தன, தனத்தத், இத்தகைய, தங்கள், செய்த, வைப்பார்கள், செய்து, போட்டவர், புரட்டிக், விரித்துக், பறித்துத், தாக்கிய, பெருமாளே